7மணி முதல் 8மணி வரை!
சங்கீத சாதகம்...!
8மணி முதல் 10மணி வரை!
கணிப்பொறி பயிற்சி...!
10மணி முதல் 12மணி வரை!
அபாகஸ் பயிற்சி...!
12மணி முதல் 1மணி வரை!
நீச்சல் பயிற்சி...!
மதிய உணவு முடிந்தவுடன்!
ஆரம்பித்து விடுகிறது!
ஓவியப் பயிற்சி...!
4மணிக்கு தொடங்குகிறது!
நடனப் பயிற்சி...!
8மணிக்கு இந்தி வகுப்பை!
முடித்துக்கொண்டு!
வீடு திரும்பிய!
பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு!
தமிழ் பாடம்!
நடத்தத் துவங்கினேன்!
ஓடி விளையாடு பாப்பா என்று. !
-அருண்மொழி தேவன்

அருண்மொழி தேவன்