தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பலூன்

ப்ரியன்
**** !
பலூன் கேட்டு !
அழுத சிறுமி !
அப்படியே உறங்கிப் போனாள்! !
சிறிது நேரத்திற்கெல்லாம் !
அழுதபடி தூங்கியவளின் !
முகமெல்லாம் புன்னகை !
எத்தனை பலூன்கள் !
வந்ததோ அவள் கனவில்! !
- ப்ரியன்

தலைநகரத் துயரக்குறிப்பு

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு!
பொழுதுகள் விடிகின்றன...!!
மாறா வடுக்களின் துயர அலறல்!
தேசங்களெங்கும் முட்டி மோதி!
மனிதம் வாழும் இதயங்களிலெல்லாம்!
விழிநீரோடு எதிரொலித்திடினும்!
எவராலும் நீக்க முடியா!
ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு!
பொழுதுகள் கழிகின்றன...!!
- எம்.ரிஷான் ஷெரீப் ,!
மாவனல்லை.!
இலங்கை

இதயத்தின் மொழியில் உன்னிடம்

காளி நேசன்
உன்னை பார்த்துக்கொன்டிருந்த நொடிகள் ஒவ்வொன்றும்!
ஒரு பிரளயம் என் காலடியில்!!
காதல் சொல்லியபின் கடந்த ஆண்டுகள்!
நொடியில் நழுவி சென்றதாக எண்ணம்!!
எனக்கு இதயத்தின் மொழியில்தான் பேச தெரியும்!!
எனக்கு புரிந்ததெல்லாம், இதயத்தின் மொழி மட்டுமே!!
என் சொல், குறியீடு, சைகை எல்லாம் என்!
ஆன்மாவின் ஆழத்தில் உதிப்பவை!!
நான் எந்த ஒரு கூட்டத்தையும் எளிதில் சாராதவன்!!
அவை சார்ந்த சொல், குறியீடு, சைகைகள் எதுவும் புரியா!!
காதலுடன் சேர்ந்து வரும் சாரல் மழை என்றனுபவத்தை தவிர!
மற்ற விஞஞானங்கள் எதிலும் நம்பிக்கையில்லை!!
நான் பார்ப்பதெல்லாம் இவைகள்தான்!
காதலின் துடிப்பு, ஆன்மாவின் அழகு, இதயத்தின் உண்மை!!
இவைகளில் எந்தவிதத்திலும் நீ தோற்றவள் அல்ல!!
சிவப்பு வண்ண உடையில் என் அருகில் நீ !
செம்பருத்தி மலரின் இதழ்களால் நெய்யபட்ட சந்தன யாழ்!!
ஆன்மாவின் ஆழத்தை உணர்த்தும் உன் அழகிய விரல்கள்!
முல்லை மலர்கள் பதித்த செண்பக பூங்குலழ்கள்!!
இந்த கரங்களுக்கு என்னால் என்ன பெரிதாக தர முடியும்?!
கொடுக்கவிருந்ததையும் கடலிடம் அளித்துவிட்டேன்!!
உனக்கு நான் எதையும் கொடுக்கவில்லை!
சில கவிதைகள் தவிர! ஆனாம் எல்லாம் இழந்து நிற்கிறேன்!!
என்னை சுற்றி சுற்றீ வந்து நீ பேசாமல் செல்வது .....நான் என்ன சொல்வது?!
இனி இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்னிடத்தில்

கனவு

ரா.கிரிஷ்
* பனித்துளிகள் மிதக்கும் புல்வெளியினூடே !
கால்தடம் பதியமால் என் பயணம் !
* ஒரு ரோஜா தோட்டம் என்னை !
ககையசைத்து வழியனுப்பியது !
* காடுகளை கடந்தேன், !
மலைகளை தாண்டினேன் !
கடலில் மிதந்து சென்றேன் !
* மேகங்கள் என்னை ஊடுருவி சென்றன !
தொட்டு விடும் தூரத்தில் !
நடசத்திரங்களும், நிலாவும் !
* எனக்கு கீழே பறவைகள் பறந்து சென்றன !
தடுப்பு சுவராய் !
வானம் மட்டும் எனக்கு வழிவிடவில்ல !
* வருத்தத்துடன் நிற்கையில் !
சூரியனின் பார்வை !
என் மேல் விழ தொடங்கியிருந்தது.... !
ரா.கிரிஷ்

அத்தனையும் நீதான்

ச.ச.ஐஸ்வர்யா
என்னை தொட்டுச்சென்ற !
ஐஸ் காற்றும் !
நீ தான்.. !
கொதிக்கும் தென்றலும் !
நீ தான்..! !
உன் அசைவுகளில் !
என்னை ஆட்கொண்டவனும் !
நீ தான்... !
அங்குமிங்கும் அலைய !
வைத்ததும் நீ தான்..! !
அடுக்கடுக்காய் இன்பங்களை !
தந்தவனும் !
நீ தான்... !
அரைநொடிக்குள் என்னை !
உருக்குலைய வைத்தவனும் !
நீ தான்...! !
என் இடைவெளிகளை !
நிரப்பியவனும் !
நீ தான்... !
இன்று வெட்டவெளியாக்கியவனும் !
நீ தான்...! !
“அனலை தீண்டும் தென்றல்” !
ச.ச.ஐஸ்வர்யா

நட்பு

ராஜா கமல்
கண்டங்கள் கடந்து விட்டாலும்!
நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும்!
உறவு அந்த உறவு!
காலங்கள் கடந்து விட்டாலும்!
கடல் அலையாய்!
மீண்டும் மீண்டும்!
இதயத்தை நனைக்கும் உறவு!
அந்த உறவு!
அன்னையிடமும்!
அருமை மனைவியிடமும்!
பகிர முடியாத!
அந்தரங்கங்களை எல்லாம்!
பகிர்ந்துக் கொள்ளும்!
அற்புத உறவு அந்த உறவு!
சோகங்களையும்!
தாகங்களையும்!
பகிர்ந்துக் கொள்ளும்!
சத்தான உறவு அந்த உறவு!
உள்ளத்திலும் உதட்டிலும்!
ஒருமித்திருக்கும்!
உறவு அந்த உறவு!
இதற்கு தாய் வழியும் இல்லை!
தந்தை வழியும் இல்லை!
அது ஒரு சோகங்களை!
இறக்கி வைக்கும்!
சுமைதாங்கி!
அது ஒரு மகிழ்சியை!
பகிர்ந்து கொள்ளும்!
பள்ளிக் கூடம்!
அது ஒரு!
பட்டாம் பூச்சியாய்!
பறந்து மகிழ்ந்த!
மலர் வனம்!
அது ஒரு!
மாறத மணம் விசும்!
நந்தவனம்!
சொற்களால் வடிக்க!
அது கம்பர் கால காவியம் இல்லை!
கற்களில் வடிக்க அது!
சோழர் கால கற்சிலையும் இல்லை!
நதியோரத்து!
தென்றலின் சுகம் அது!
கோடை மழையின்!
சாரலின் சுகம் அது!
உள்ளத்தால் மட்டுமே!
உணர்ந்து கொள்ளும்!
அற்புத உணர்வு அது!
இந்த உறவுக்கு மட்டும்!
என்னவோ தெரியவில்லை!
வயசாவதே இல்லை!
இது ஒரு!
ஒளிர்ந்து மறையும்!
மத்தாப்பூ அல்ல!
இது ஒரு!
பூத்து உதிரும்!
உதிரிப் பூவும் அல்ல!
உதிரும் பூக்கள்!
உள்ள உலகில்!
உதிரா பூ!
இந்த நட்பு!
சில நேரங்களில்!
சில மனிதர்களிடம்!
ஒரு முறை மட்டுமே!
பூக்கும் அதிசய பூ!
இந்த நட்பு

அடக்கவேண்டிய அத்துமீறல்

சித. அருணாசலம்
அன்றாட நிகழ்வுகள்!
அமைதியாய் நடந்து கொண்டிருக்க,!
கொஞ்சம் கொஞ்சமாய் !
வேலியைத் தள்ளி வைக்கும்!
கேவலத்தைக் !
கொள்கையாய்க் கொண்ட!
அண்டை நாடு.!
அதன் வேஷம் தெரியாமல்!
விழுந்து விழுந்து நட்பிற்காய்!
நேசக் கரம் நீட்டுகின்ற நிலைமை.!
பொருள்களில் எல்லாம்!
போலிக்குப் பெயர் போனவர்களின்!
நயவஞ்சக நடவடிக்கைகள்!
நமது ஊர் அரசியல்வாதிகளுக்கு!
விளங்க வில்லையா? - இல்லை!
நாட்டுப் பிரச்னை!
நமக்குச் சம்பந்தமில்லை என்று!
வழக்கம் போல் இருக்கிறார்களா?!
!
-சித. அருணாசலம்

உணர்ச்சிக் கவிஞா

இளவரசன்
உணர்ச்சிக் கவிஞர்! !
வாழியவே நீடுழி !! !
!
வடு சுறணையற்று சுருண்டு படுத்த தமிழனை !
நெருப்பாகி எழ வைத்த வல்லமைக் கவியே ! !
சும்மா இருந்தால் வருமா ஈழம் !
எருவாகி வாடா தமிழா என்றவனே ! !
உன் பாடல் கேட்டுத் தான் - எம் !
உதிரத்திற்கு உணர்வு வந்தது !
உன் மொழி கேட்டுத் தானே எமக்குள் !
எழுச்சி பிறந்தது !
பைந்தமிழில் நல்ல பா தந்த கவியே ! !
பாரினில் புலம்விட்டு நாம் வாழ்ந்திட்ட போதிலும் - நின் !
பாட்டாலே தமிழன் முகவரி சொன்னோம் !
புலிகளும் இந்நாளில் இல்லையெனில் மண்ணில் !
எலிகளும் தின்னும் இத் தமிழினத்தை என்று !
தீர்க்க தரிசனம் தந்தவனே உன் !
வாய்மை பலித்தது எம் மண்ணில் ! !
அகிலமும் வாழ்த்தும், முத்தமிழும் வாழ்த்தும் !
இனமும் நினை வாழ்த்தும் !
உனைப் புலிகளும் வாழ்த்துவர் இந்நாளில் ! !
வாழ்க கவியே வளமுடன் நீடுழி ! !
வாழ்க வாழ்கவே ! !
கனடாவிலிருந்து இளவரசன் !
!
(சித்திரைத் திங்களில் பிறந்த எங்கள் உணர்ச்சிக் கவிக்கு புலம் பெயர்ந்த தமிழினம் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்)

வாழ்க்கை

காசிகணேசன் ரங்கநாதன்
1. !
எண்ணங்களால் எண்ணப்பட்ட !
என் !
நாட்கள்.. !
விலைபோயின. !
எண்ணங்களால் !
எண்ணப்பட முடியாத !
என் !
சுவர்க்கங்கள்... !
அவற்றுக்காகவே !
நான் !
உயிர் வாழ்ந்தேன்... !
விலைமதிக்க முடியாத !
என் !
சுவர்க்கங்கள்... !
மிக மலிவாக !
சந்தையில் !
கூவி விற்கப்பட !
நானும் !
மந்தையில் ஒருவனானேன். !
எழுதல், நகர்தல், நிமிர்தல் !
என !
வியர்வைக் கசகசப்போடு !
வாழ்க்கை !
நகர்ந்து சென்றது... !
!
2. !
கொட்டிக் கிடக்குது வைரம்... !
உலகம் முழுவதும்... !
காற்றிலும்... !
மழையிலும்... !
வானிலும்... !
பூமியிலும்... !
அள்ளியெடுக்க நேரமில்லாது !
முடிகிறது வாழ்க்கை

ஒப்பாரும் மிக்காரும்...?

இமாம்.கவுஸ் மொய்தீன்
பொது விடங்களில்!
துப்புவதிலும்!
நான்கு பேர் !
கூடியிருக்குமிடத்தில்!
மூக்கையும் சளியையும் சிந்தி!
அசுத்தப் படுத்துவதிலும்!
உண்ட வாழையின் !
தோலை வீதியில் !
வீசி எறிவதிலும்!
பொதுவிடங்களில் !
சுவர்களைத் தேடி!
சிறுநீர் அபிஷேகம் !
செய்வதிலும்!
எச்சத்தையும் மிச்சத்தையும்!
கண்ட இடங்களில்!
போடுவதிலும் நம்மை!
ஒப்பாரோ மிக்காரோ தான்...!
எவர்?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்