இறந்தவர்களெல்லாம்!
பள்ளத்தில் விழுந்து !
மீண்டுமொருமுறை!
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!!
அவர்களின் தற்கொலைகள்!
தோல்வியில் முடிகின்றன!!
இந்தப் பள்ளங்கள்!
ஒருவரை ஒருமுறைதான்!
இரட்சிக்கும்!!
நிலத்தின் !
சதைப் பிடிப்பில்!
விழுந்த காயங்களைச்!
சுமந்து கொண்டு!
மரணம் நெளியும்!
பள்ளங்கள்!!
வீட்டுக்கொரு!
பள்ளம் உருவாகி!
உயிரோடிருப்பவர்களுக்காகக்!
காத்திருக்கின்றன!!
அவர்கள்!
பள்ளத்தில் விழும்!
கணங்களை!
அங்குலம் அங்குலமாக!
அளவெடுத்து!
நீண்டுருக்கிறது அவர்களுக்கான!
மரணங்கள்!!
நிலம்தோறும்!
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்!
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை!
மிக அலட்சியமாகக் !
கொன்று குவிக்க!
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்!
பலவீனம்!!
கே.பாலமுருகன்!
மலேசியா

கே.பாலமுருகன்