கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!
வினோத்குமார் கோபால்