சக்தி சக்திதாசன்!
கைகளில் கலப்பையும்!
கண்களில் ஏக்கமும்!
கால்களில் தயக்கமும்!
கலங்களில் வெறுமையும்!
பகலினில் வியர்வை!
இரவினில் கண்ணீர்!
இவர்களின் வாழ்க்கை!
இயற்கையின் கொடுமை!
வீதியில் படுக்கை - தெரு!
விளக்கினில் படிப்பு!
விடியுமா இவர் வாழ்வு ?!
விளக்குவார் யார் உலகில் ?!
ஆயிரம் கட்சிகள்!
ஆளுக்கோர் கோஷங்கள்!
அரசியல் வியாபாரம் - பாவம்!
அரிசியில்லா உலைகள்!
நேற்றும் அழுதனர்!
இன்றும் அழுகின்றார்!
நாளை அவர் வாழ்வில் ...?!
நடக்கட்டும் மேதினம்!
உனக்கொன்று சொல்வேன்!
உள்ளதைச் சொல்வேன்!
உலகத்தார் நெஞ்சத்தில்!
உண்மை விழிக்கு தினமே!
உண்மையான மேதினம்
சத்தி சக்திதாசன்