குணாம்சம்!
-------------------!
நீயொரு பெண்!
இதை நீ மறக்காமலிருத்தல் நன்று!
வீட்டின் படியைத் தாண்டியதும்!
ஆண்கள் சந்தேகப் பார்வை பார்ப்பர்.!
சாலையில் இறங்கி நீ நடக்கையில்!
உன்னைத் தொடர்ந்து விசிலடிப்பர் ஆண்கள்!
சாலையைக் கடந்து முக்கிய சாலையில் இறங்குகையில்!
உன் மீது அவதூறு சொல்வார்கள், பைய்த்தியம் என்பார்கள்!
உனக்கென்று குணமில்லை என்றால்!
நீ திரும்பி விடுவாய்!
உனக்கென குணமிருந்தால்!
நீ நடந்து கடந்து கொண்டிருப்பாய்!
இப்பொழுது போய்க் கொண்டிருப்பதைப் போல!
--------------------------------------!
!
மலிவாய் கிடைப்பன!
------------------------ !
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை!
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்!
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்!
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்!
அவர்கள் மயிர்களில் தேய்க்க வாசனை எண்ணெயும்!
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்!
அவர்கள் மாமிச திட்டுகளை அள்ளி!
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்!
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்!
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்!
ஒரு சுற்றுச் சேலை என்றால்!
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்!
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட !
எப்பொழுதாவது குரைத்து விடும்!
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின் !
வாயில் பூட்டு!
தங்கப் பூட்டு!
தஸ்லீமா நஸ் ரீன்
தஸ்லீமா நஸ் ரீன்