வலை
பனசை நடராஜன், சிங்கப்பூர்
காலம்... !
நம் வாழ்க்கை வழியெங்கும் !
கணக்கிலடங்கா வலைகளை !
விரித்து வைத்துக் !
காத்திருக்கும்...! !
!
கொள்ளை நோய், !
வெள்ளம், புயலென !
எல்லா வலைகளும் !
எதிர்பாராத இடங்களில்..! !
!
முன்னறிந்தும், எதிர்கொண்டும் !
நுண்ணறிவால் தப்பினால்.. !
!
புத்தி !
தடுமாறச் செய்யும்.. !
இன்னொரு !
தந்திரவலை வீசும்.. !
நமக்குள்ளே சண்டையிட்டும், !
நச்சுப் 'புகைப்' பிடித்தும், !
மது குடித்தும் மடியச் செய்யும்! !
!
தவிர்த்தும், தாண்டியும், !
அறுத்தும், அகற்றியும் !
அகப்படாமல் ஓடுகிறோம்...! !
ஒவ்வொரு நாளும்..! !
!
உயிர் வாழ்தலுக்காக..!!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்