ஆதியில்லா பொருள் இரண்டு!
ஒன்று கடவுள்!
மற்றொன்று கன்னித்தமிழ்!!
கடவுளுடன் கண்ணாமூச்சியாட!
கையாளாகா விதி!
அன்னைத் தமிழுடன்!
ஆடிப்பார்க்க!
ஆசையெடுத்தது!!
தமிழும் தமிழரும்!
கருக்கொண்டு உருவாகி!
தரணிக்கே நல்தருவென!
தலைத்திருந்த!
லெமூரியாவென்னும்!
குமரிக் கண்டத்தை!
குலுக்கியெடுத்தது!!
நிலமுத்தென வாழ்ந்த!
நற்றமிழரை!
கடற்முத்துடன்!
கலக்கிக் களித்தது!!
அமிழ்தொப்பும்!
எம்தமிழ் நூல்களை!
கடலில் கரைத்து!
கடலின் உவர்ப்பைக் குறைத்தது!!
தமிழ் சங்கம்தனை!
சமுத்திரம் கொண்டாலும்!
சலைக்காத எம்தமிழர்!
புது சரித்திரம் கண்டார்!
சோழ சேர பாண்டியர்!
தரணியை வென்றார்!!
தமிழன் நிலத்தை!
கடல் கொண்டது - ஆனால்!
தமிழன் இமயவரம்பை கொண்டான்!
அதனினும் உயர்ந்து நின்றான்!!
முதற் முயற்சியில் தோற்றாலும்!
கலங்கிப் போகவில்லை!
கஜினி முகம்மதுவின் முப்பாட்டன் விதி!!
களப்பிரர் அனுப்பி!
கலகம் செய்து பார்த்தது!!
தமிழுக்குத் தாத்தா!
வடமொழியென!
புதுக்கரடி விட்டது!!
வடமொழி ஆதி!
அதில் நீ பாதி!
என வாய்ஜாலம் செய்தது!!
தமிழ் மன்னர் மதி மயக்கி!
அவர் இயற்ப்பெயர் இறக்கி!
பின்!
அரியனையும் இறக்கியது!!
தமிழன் கட்டிய கோயிலில்!
தமிழுக்குத் தடை!
தமிழர்க்கு இடமாற்றம்!
கடவுளுக்கும் பெயர் மாற்றம்!!
மாற்றாரை அனுப்பி!
தமிழ் நிலம் பரப்பி!
தமிழரை!
ஏவலராக்கி!
ஏமாற்றி மகிழ்ந்தது!!
கப்பலில் ஏற்றி!
கானகம் செலுத்தி-அங்கே!
கரும்புத் தோட்டத்தில்!
எம் கன்னியர் கற்பை!
கரும்புச் சக்கையாய்!
கசக்கி எடுத்தது!!
தமிழனை!
கயவனாய் கள்வனாய்!
அரக்கனாய் அயோக்கியனாய்!
சாத்திரம் செய்து வைத்தது!!
தேடித் தேடி!
வடமொழிப் பெயர் சூடி!
எம்தமிழன் மகிழ்ந்திருக்க!
அவன் வீட்டு மொழியாய்!
ஆங்கிலம் அமர்த்தியது!!
முல்லைக்காட்டில்!
பள்ளாங்குளியாடும் பருவத்தில் நங்கையர்!
பதுங்குகுழி தோண்டுகின்றார்!
ஏர்பிடித்த கைகளில்!
AK-47!!
உலகெங்கும் கூலியாய்!
தமிழன்!!
கூலியின் மொழியாய்!
தமிழ்!!
ஆனாலும் தமிழா!
கலங்காதே!!
இந்த காரிருள்!
தமிழ் பரிதியின் முன்!
பனியாய் மாயும்!
பொற்காலம் மீண்டும் வரும்!
தரணியின் அரியணை!
தமிழன் தாங்கும்!!
வாழ்க தமிழ்!!!!
- இரா.ச.கோகுல் நந்தகுமார்
இரா.ச.கோகுல் நந்தகுமார்