போரறிந்த சமாதானம் - ரவி (சுவிஸ்)

Photo by Maria Lupan on Unsplash

போர் கவிழ்ந்த எமது தேசத்தில் !
தளபதிகள் உருவாயினர் !
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது !
மறுக்கப்பட்டனர். !
வரலாற்றை !
போராட்டம் நகர்த்திச் சென்றது !
ஆனாலும் நாம் !
அனுபவங்களும் சிந்தனைகளும் !
சேர்ந்து நடக்க !
தடைவிதித்தோம். !
மலிவாய் நாலு வார்த்தைகளுடனே !
வந்துவந்து !
செல்கிறான் என் சகோதரன் !
அழிவுகளின் பின்னான உயிர்ப்பொன்று !
இருக்குமெனின், !
அழிவை நாம் !
சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறான் என் !
நண்பன். !
இறந்துபோன இராணுவத்தினனின் கணக்கை !
ஓயாது கரைகிறது என் முற்றத்தில் !
தமிழ் வானொலி. !
இந்தக் கரைவினிடை, !
இரவோடு இரவாய் காணாமல் போனோர் !
கொலைசெய்யப்பட்டோர் தொகை !
தொடர்ந்தும் !
காணாமலே போய்க் கொண்டிருந்தது - !
காரணமும்கூட. !
இனந்தொ¤யாதோர் என்ற சொல் !
மீண்டும் மீண்டும் !
கொலைஞர்களின் ஆடையாகிறது. !
மனிதாபிமானத்துக்கு எல்லைகள் !
வரையப்பட்ட தேசமொன்றில் !
அனாதையாய்ப்போன குழந்தைக்கு !
கூடமைக்கவும் !
அனுமதி கேட்கவேண்டியதாயிற்று. !
கேள்விகேட்கப்பட முடியாத போராட்டம் !
துறவியிலும் தொற்றிய இனவெறி !
இதனிடை நாம் !
சமாதானத்துக்காகப் !
பயணித்தோம் மூன்றாம் தரப்பின் வாகனத்தில். !
உலகமெலாம் துப்பாக்கி உழவில் !
’ஐனநாயகத்தை’ விதைக்கும் !
மாமல்லர்களும் மூக்கை !
நுழைத்தாயிற்று !
இனி என்ன !
காத்திருப்போம் !
காத்திருப்போம் கால எல்லையின்றி. !
சமாதானம் !
போரின் இறப்பை மட்டுமே !
இலக்கு வைக்குமெனினும் அதுவாய் !
வருக. !
யுத்தக் களையில் மூச்சிரைக்கும் ஐ¦விக்கு !
சுவாசக் காற்றை கொண்டு வருக. !
தேய்ந்து நாம் !
கட்டெறும்பான கதையின் பின்னரும் !
பொரித்துக் கொள்வோம். !
-ரவி(சுவிஸ், 050803)
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.