வயதோ பதினான்கு !
வயதுக்கு மீறிய வளர்ச்சி !
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான் !
வாழ்க்கை என்றால் !
என்னவென்றே தெரியாத அந்த !
வயதுக்கு வராத சிறுமிக்கு !
வாழ்க்கை பிரச்சினை !
வழக்காக வந்தது !
வழக்காட வந்தாள் !
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள் !
வாழ்க்கையை வழக்காக பார்க்கும் !
வல்லமை படைத்த வல்லுனர்கள் !
வாழ்வின் பெரும்பகுதியை !
வழக்குகளோடு கழித்த !
வயதான நீதிபதி !
வந்தார் அமர்ந்தார் அவள் !
வழக்கை கேட்க ஆயத்தமானார் !
வார்த்தைகளா அவைகள் ? !
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட !
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள் !
எனக்கு எட்டு வயதிற்குள் !
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது !
காதலோ பத்து வயதில் !
கலர் கலராய் வானவேடிக்கை காட்டியது !
கட்டி பிடித்து தரும் முத்தம் என் !
கனலை கூட்டியது பதினோராம் வயதில் !
ஓடி போகலாம் வாழ்க்கை நடத்தலாம் என்பதை !
ஓராண்டுக்கு முன் தெரிந்து கொண்டேன் !
இதனையும் சொல்லி தந்த !
ஆசான் கள் யார் தெரியுமா? !
தான் வாழும் சமுகத்தை !
தரங்கெட்ட நரகமாக்கும் !
இன்றைய எழுத்து வேந்தர்களும் !
இயக்குனர் செம்மல்களும் தான் !
திரைப்படங்கள் என்னை !
தடம் புரள சொன்னது !
காமத்தில் கரை காண தூண்டியது !
தொலைகாட்சி நாடகங்களோ என்னை நானே !
தொலைத்துக் கொள்ள வழிகாட்டியது !
வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே !
வயிற்றில் மூன்று மாத கரு !
கருவைச் சுமந்தவளாய் நான் !
களங்கப்பட்டவளாய் நான் !
களங்கப்படுத்தியதோ !
காமத்தை அறியாத விடலைசிறுவன் !
அகவை பதினாறுக்குள் !
கற்பழிப்பு வழக்கை அவன் மேல் தொடரலாம் என் !
கற்புக்கு ஓர் விளையும் வாங்கி தரலாம் !
என் வாழ்க்கைக்கு என்னை !
பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாமல் !
என்னை கெடுத்தவனுக்கு !
தன வாலிபத்தில் பெரும்பங்கை !
சிறையில் கழிப்பவனுக்கும் !
என்ன தரபோகிறது ? !
இந்த சமூகமும் நீதி மன்றமும் !
என் தாய் மாண்டு போனாள் !
நான் கேட்டு போன செய்தி கேட்டு !
என் தகப்பன் மாயமானான் !
நான் கர்ப்பம் தாங்கி நின்றதை கண்டு !
என்னோடு பிறந்தவளோ !
தானே தனித்து போய் அநாதை ஆனாள் !
இன்று இந்தவழக்கு முடியும் வரை !
இரக்கத்தோடு உச் கொட்டும் சமூகம் !
நாளை என்னை எப்படி பார்க்கும்? !
பதினாலு வயதிலேயே !
பத்தினி தனம் விட்டவள் தானே என்று !
தொட்டு பார்க்கும் துணிந்து !
படுக்கை போட்டு முந்தி விரிக்க சொல்லும் !
இத்தனையும் இழைத்த !
இன்றைய இயக்குனர் எழுத்தாளர்களை !
இந்திய தண்டனை சட்டம் தண்டிக்குமா ? இல்லை !
இந்த அவலங்கள் தொடராதிருக்க !
காதலை கடை சரக்காக்கும் !
கயமைக்கு தடை விதிக்குமா ? !
வழக்கறிஞர்கள் கேட்டனர் அவள் !
வாழ்க்கையை !
வழக்கின் வட்டத்திற்குள் அடைத்தனர் !
வழக்கின் விளிம்பில் நின்று !
வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்தனர் !
என்னை கெடுத்தவனுக்கு எட்டாண்டு சிறை !
எனக்கோ வாழ் நாள் முழுவதும் வதை !
வாழ்க இன்றைய திரைப்படங்கள் நாடகங்கள்
ச இரவிச்சந்திரன்