மனிதம் பிறப்பிப்போம். மெல்லக் - வித்யாசாகர்

Photo by Maria Lupan on Unsplash

மனிதம் பிறப்பிப்போம்!.. மெல்லக் காதலித்தோம்!
!
01.!
மனிதம் பிறப்பிப்போம்!!
------------------------------- !
உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில்!
பாசமும் போட்டியும் எப்படியோ !
நிகழ்ந்தே விடுகிறது;!
யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்!
எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?!
அந்த மெச்சுதலில் தான் !
தோன்றி போயின எத்தனை கோடுகள் -!
நாடென்றும் இனமென்றும் மதமென்றும்!
ஜாதியென்றும் - !
மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு!!
எங்கோ போகிறது நம் வாழ்க்கை!
கல்கி பிறப்பார் கடவுள் வருவார் !
அதிஷ்டம் அடிக்கும் என்றெல்லாம்!
சேர்த்து வைத்திருக்கும் -!
நாளைக்கான அத்தனை எதிர்பார்ப்பையும்!
தூக்கி எறி;!
வா, இன்றைக்காய் இந்த பொழுதிற்காய்!
எல்லாம் மறந்து மனிதராய் மட்டும்!
கட்டி அனைத்துக் கொள்வோம்!!
02.!
மெல்லக் காதலித்தோம்!
----------------------------- !
நீ தினமும் வரும்!
அதே தெருவில் தான்!
நானும் வருகிறேன்!
நீயும் வருகிறாய்;!
சற்று நேரம் முன்பாக!
வந்து பார்த்தேன்!
நீயும் முன்பாக வந்தாய்;!
சற்று தாமதமாக வந்தேன்!
நீயும் தாமதமாகவே வந்தாய்;!
நீ என்னை காதலிப்பதாகவோ!
நானுன்னை காதலிப்பதாகவோ!
இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை;!
நீ பார்க்கிறாய்!
நானும் பார்கிறேன்;!
நான் சிரித்தால்!
நீயும் சிரிப்பாய் -!
ஆனால் நாம் நம் சிரிப்பை!
நம் பின்னாளுக்கென!
மிச்சப் படுத்திக் கொண்டோம்;!
நம்மை நாமே வாரி நுகரும்!
வாசமாய் -!
நானும் நீயும் தினம் தினம்!
உன்னையும் என்னையும் நெருங்கிக் கொண்டிருக்க;!
மெல்ல அரும்புகிறது நமக்குள்!
காதலென - !
இருவருமே!
நினைத்துக் கொண்டே செல்கிறோம்..!
நாம் கடக்கும் தெரு முழுக்க!
நம்மை -!
விருச்சொடித் தனமாய் பார்கிறது
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.