நான் மட்டுமல்ல!
நம்மில் பலரும்!
நம்மோடு சிலரும்!
ஒப்பனையாகவே!
உலாவிக்கொண்டிருக்கிறோம்!
இதயத்தில் பெருவலி!
இருமுறையான போதும்!
இருக்கின்ற ஒருமகளை!
இணைகரம் சேர்த்திடவே!
ஒப்பனையாய் உதடுகளில்!
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!!
நாளுக்கு நாள்மாறும்!
நாகரீகச் சாக்கடையில்!
இதயத்தைக்கிழிக்கும்!
இன்பத்தை மறைத்து –(மனதில்)!
கொண்டவளை தோழியென!
உறவுக்குச்சொல்லிவிட்டு!
உறவான உறவுகள்!
எத்தனை ??? எத்தனை ???!
நான் மட்டுமல்ல!
நம்மில் பலரும்!
நம்மோடு சிலரும்….!
ஒத்தையான ஒருமகளின்!
ஒத்தைக் கல்காதணியும்!
அடமானம் ஆகிடாது!
அடிவயிற்றுப் பெருவலியை!
அடைகாத்(த)து கோழிபோல!
ஒப்பனையாய் உதடுகளில்!
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!!
இப்படியாக சிலபேர்….!
இன்னும் பலபேர்….!
ஆக்கம்: கண்டனூர் சசிகுமார்

கண்டணூர் சசிகுமார்