தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாளை உன் வருகைக்காக

த.சரீஷ்
நீழும் இரவுகளின்!
ஒவ்வொரு!
வினாடியின் முடிவிலும்!
உன் பெயர் ஒலிக்கும்!
காணும் கனவுகளின்!
ஒவ்வொரு!
காட்சியின் நடுவிலும்!
உன் முகம் தெறிக்கும்!
விரையும் காலங்களின்!
ஒவ்வொரு!
பொழுதின் இடையிலும்!
உன் நினைவுகள் தொடரும்!
தொலைவாகிப்போனபின்பு!
நீழும் பிரிவுகளாய்!
இன்னும் நீ...!!
மறுபடி மறுபடி!
உயிர்த்தெழுந்து...!
இன்றும்...!
நான் என் காதலுடன்!
நாளை!
உன் வருகைக்காக....!
!
-த.சரீஷ்!
24.04.2006!
(பாரீஸ்)

மகா சக்தி.. பூமி சொல்கிறது.. கிராமத்து

ஜே.ஜுனைட், இலங்கை
மகா சக்தி.. பூமி சொல்கிறது.. !
கிராமத்து தென்றல் !
01.!
மகா சக்தி!
--------------------!
விழியோரம் வடிகின்ற!
ஒரு நீர்த் துளிதான்!
இந்த உலகத்திலேயே!
சக்தி மிக்கது!!
அணு குண்டை விடவும்!
அபூர்வமானது.!
ஒரு நீர்ச்சுணையருகில்!
நின்று!
தவங்கிடந்தாலும்!
கிடைக்காது… இந்த!
அதிசயத்து நீர்!!
இந்தப் பாரையே!
புறட்டுகின்ற!
பக்குவம் பெற்றது!
கண்ணீர்த் துளிதான்!!
ஆசைப் பட்டால்!
கண்ணீரிலும்!
கப்பல் ஓட்டலாம்…!
அதற்கும் மிஞ்சினால்!
ஒரு துளிக்!
கண்ணீரிலேயே!
அகிலத்தை அடங்க!
வைக்கலாம்… !
02.!
பூமி சொல்கிறது!
-----------------------!
“ஈசனவன் படைத்து விட்டான்…!
இமயங்களைச் சுமத்தி விட்டான்…!
என்னிதயம் மண்ணுக்குள்ளே!
மண்ணவரோ எனக்கு மேலே…,!
மானிடனின் மனசுக்குள்ளே!
எதைப் படைத்தாய்!
என்னிறைவா..?!
எனைச்சுடச்சுட!
வைப்பதேனோ…!
காரிருளும் ஒளிமயமும்!
என் வாழ்க்கை வட்டங்கள்…!
நான் சுமக்கின்ற மானிடர்!
தருமதிப்புகளும் “வட்டங்கள்”!
வாய் திறந்து சொல்லி விட!
என் வாயோ இதயத்தில்!!
எனைச்சுடச்சுட!
வைப்பதேனோ…!
சுடச்சுட வைப்பதேனோ!
எனைச்சூடதனால் சூழ்வதேனோ…!
படப்பட நெகிழுகிறேன்!
மானிடப் பாதம் பட்டதனால்!
பாடுகிறேன்..!”!
!
03.!
கிராமத்து தென்றல் !
-----------------------------!
சொட்டும் தென்றல் சொடக்கெடுத்து!
சோனாமாரி பொழிகிறது….!
போதை கசிந்து உள்ளத்திலே!
ஊழித் தீயாய் எரிகிறது….!
இத்தனை சுவாசங்கள் தாண்டி!
மறுபடி ஜனனம் நடக்கிறது!
இருதயத் துடிப்பைத் தூண்டிவிட்டு!
அழகிய தென்றல் அழைக்கிறது…!
தென்றல் ஊதிய எழில் மிகு தீபம்!
நெஞ்சில் பிடித்து ஒளிர்கிறது….!
ஏதோ மனது பீடித்திங்கு!
பட்டுத் துண்டாய்ப் பறக்கிறது!
இதுவரை நாளும் உயிரின்றி உடலோ!
தனியாய் வாடிக்கிடந்ததிங்கே..!
தென்றலின் தணிக்கரம் தீண்டியதாலே!
முதல் முறை நாடி துடிக்கின்றதே….!
ஒரு சொற்ப முகிலாய்!
மனசுக்குள் புகுந்து!
“சோ”வென மழையாய்ப்!
பொழியுகிறாய்…!
கீழ்த்திசை ஒளியாய் உள்ளத்தில் எழுந்து!
உஷ்ணத் தீயால் வாட்டுகிறாய்…

சிறகடிப்பு

பட்டுக்கோட்டை தமிழ்மதி
கவிதை!
சிறகடித்துப் பறக்கும்தானா?!
என்!
கவிதை ஏடொன்று!
காணாமல் போனது.!
தேடாத இடமெல்லாம்!
தேடிமனம் ஓய்ந்தபோது!
அது!
தேடிய இடத்திற்கே வந்தது.!
கவிதை!
சிறகடித்துப்பறக்கும்தானா?!
பூக்கள்!
பறந்துபின் கிளைக்கே வர!
கிளிகளில்லை!
பாடிய என் கவிதைகளை!
படித்துவிட்டு வைத்தது யார்?!
என்!
கவிதைகளை கிளிகளென்று!
கனவுகாண வைத்தது யார்?!
மறைத்துத்தான் வைத்திருந்தேன்!
கவிதை என்பதால்!
மண்ணுக்கே பொதுவானதா!
மற்றவர்கை சேர்ந்ததா?!
எதற்கெடுத்தார் எதைப்படித்தார்?!
இந்த!
கவிதையின் அருகில்!
ஏதோ எழுதி!
அதை!
அடித்துவைத்தது யார்?!
இலைமறை காயாக!
எழுதப்பட்டதென்ன?!
இப்படி!
எழுதியடிப்பதும் இனிய கவிதையா?!
இலை காற்றிலசைந்தால்!
காய் கண்ணுக்குத் தெரியும்.!
காயாக எழுதி!
இலையாக அடித்தது யார்?!
வார்த்தையில்!
வைக்கமறந்த!
புள்ளியை வைத்து,!
பொருளுக்கு!
செல்லாத சொல்லை!
செல்லும்படி செய்தது யார்?!
இப்படி!
புள்ளிவைத்துக் கவிதையில்!
புதுக்கோலம்!
போட்டதுதான் யார்?!
புள்ளியை!
பொட்டுப்போல் வைத்ததில்!
கவிதை!
பொன்முகம் பூத்து!
புன்னகை புரிந்தது.!
மறுமுறை பார்க்க!
நிலவுபோலிருந்ததில்!
என் கவிதை!
வானத்தில் எழுதப்பட்டதாய்!
வரம் பெற்றது.!
யாரென்று அறிந்துக்கொண்டேன்!
அரங்கேற்றம்!
என் கவிதைக்கு மட்டுமல்ல!
உன் மனதுக்கும் தான்.!
நீரில்!
அலைவரிகளாய்!
காற்றோடு கவிதை எழுத!
உன்!
கைகளுக்கும் உரிமை உண்டு.!
நினைத்து நினைத்து!
எழுதி எழுதி!
மனசுக்குள்ளே வைத்திருந்தாலும்!
காதலைப்போல!
கவிதையையும் யாராலும்!
கட்டிப்போட முடியாது.!
கவிதை!
சிறகடித்துப்பறக்கும்தான்

நிழல் தேடும் மரங்கள்

சாந்தினி வரதராஐன்
விதைத்த விதை வெடித்து !
விருட்சமாக வளர்ந்து !
விழுதுகளை பரப்பி !
நிழலை அளித்த மரங்கள் !
துளிர்த்த இலைகள் பழுத்து !
நிலத்தில் விழும்பொழுது !
நிஜத்தை மறந்த மனித !
மனதை தேடும் மரங்கள். !
மண்ணில் அன்று குழந்தை !
வளர்ந்த பின்பு மனிதன் !
தன்னை வளர்த்த மண்ணை !
சுவடு பதித்த நினைவை !
எண்ணி பார்க்க இன்று !
இதயம் இல்லா மனிதன். !
உலாவரும் நிலவைப்போல !
உருகிவாடும் மரங்கள் !
நிலாவிடம் தூது செல்லும் !
தம் நிஜத்தை உரைக்கச் சொல்லும் !
தேய்ந்திடும் மதிகளெல்லாம் !
தேயும் காலம் கழிந்த பின்னும் !
வளர்ந்திடுவோம் என்ற எண்ணம் !
மனதில் எண்ணிக்களிக்கும் !
மதிகெட்ட மனிதம் மட்டும் !
வயது எல்லை கடந்த பின்னும் !
புதிதாய் பிறப்பதில்லை !
பு£¤ந்து கொள்வாய் மனிதா! !
கடந்ததை எண்ணி எண்ணி !
புலம்பும் நிலையை நீயும் கடந்து !
நிஜங்களை தேடித் தேடி !
நீட்சமாய் செல்வாய் மனிதா. !
ஏற்றமுடன் நல் கருத்து !
என்னுள் எழும் பொழுது !
தேற்றமுடன் நானும் !
எடுத்துரைக்கும் மரம் நான் !
வாட்டமின்றி தமை வருத்தி !
உமை வளர்த்த மரங்கள் !
தம் நிழலை தேடித் தேடி !
அலையும் நிலையை அறிந்தும் !
அறியா மனதம் இன்று !
அகதியாக இங்கு.............. !
!
சாந்தினி வரதராஜன் !
ஜேர்மனி

மெனோபாஸ்

s.உமா
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோடா!
பாரதியார்.!
உள்ளம் சோர்து போகும் நெஞ்சில்!
உற்சாக மின்றி ஆகும்!
கோபம் வரக் கூடும் கடுஞ்!
சொல்லும் வீச லாகும்..!
உடலின் உறுதி போகும் நாளும்!
தேயும் எலும்பும் வாட்டும்!
கூடும் எண்ணம் ஓடும் எதிலும்!
நாட்ட மின்றி வாடும்..!
குற்ற மவள்மேல் இல்லை இயற்கை!
மாற்ற மிந்த தொல்லை!
நாற்ப தொத்த வயதில் பெண்மை!
நலன் கெடுவ துண்டு..!
உண்மை நிலை புரிந்து நீயும்!
ஒத்து ழைத்து வந்தால்!
நீரில் பட்ட நெருப்பாய் இன்னல்!
தானும் பட்டுப் போகும்..!
கைப் பிடித்த கணவன் சற்றே!
கால் பிடிக்க வேண்டும்!
பெற்றப் பிள்ளைக் கூட கொஞ்சம்!
பொறுமைக் காட்ட வேண்டும்..!
காதல் சொன்ன கண்கள்!
கவலை காட்டும் போது!
கரும்புக் கதைகள் பேசி அவள்!
கருத்தை நீயும் மாற்று..!
ஓய்ந்து போன நெஞ்சில்!
உற்சாகம் கொஞ்சம் ஊற்று!
தாரம் அவள் துயரில்!
தாயாக நீயும் மாறு..!
தேனான சொல் ஊற்று!
தீர்க்கும் அவள் தாகம்!
பாடான இப் பாடு!
பார்த்தால் சிறிது காலம்...!
சத்தான பழமும் பாலும்!
காயும் உணவில் கூட்டு!
சீரகும் வாழ்வு அதனை!
சிந்தை யில்நீ ஏற்று...!
நேராக அவளும் நெஞ்சம்!
தெளிவு பெறும் போது!
தாயாக மாறி அவளே!
தாங்கி டுவாள் உன்னை...!
வயதான காலம் வாழ்வில்!
வந்து விட்டப் போதும்!
தோழி யாக நின்று!
தோள் கொடுப்பாள் என்றும்...!
-உமா

உறக்கம் எழுதும்.. நீ பிரிந்த

தை.ரூசோ
உறக்கம் எழுதும் கவிதை.. நீ பிரிந்த வேளையிலே..!
01.!
உறக்கம் எழுதும் கவிதை!
--------------------------------!
இந்த கனவுகள்..!
இரவில் விதைத்தால் விடிவதற்குள் !
பூத்துவிடும் செடி கனவு மட்டும்தான்..!
கனவுக்கு பசியெடுத்தால் !
நம்நேரத்தை சாப்பிட்டுவிடும்..!
அதிகாலை கனவுகள் கரைந்துபோய்விடுகின்றன !
பனித்துளியின் அடர்த்தியில்..!
அவளுக்காய் காத்திருக்கிறபோது அவள் வரவில்லை. !
இந்த கனவு மட்டும் தவறாமல் வருகிறது..!
ஏய் கனவே உறங்குவது போல !
ஒரு கனவை கொடு அப்போதாவது உறங்கிகொள்கிறேன்..!
எல்லா கல்லறைகளிலும்!
ஏதாவது ஒரு கனவும் சேர்த்தே புதைக்கப்படுகிறது..!
02.!
நீ பிரிந்த வேளையிலே..!
-------------------------------!
தீ!
திரியை பிரிகின்ற பொழுதில் தீக்குள் நிகழும்!
படபடப்பை போல என் இதயம் நீ பிரிந்த வேளையிலே..!
எதிர் எதிரேஇருவரும்!
பிரிந்து கடந்து போகிறோம்!
நம் மௌனம் மட்டும் ஒன்றாய் போகிறது!
தினமும் உதிக்கும்சூரியனாய் இரு!
சுட்டெரித்தாலும் தாங்கி கொள்வேன்!
குளிரும் பௌர்ணமியாய் வேண்டாம்!
பிரிவை தாங்கி கொள்ள!
என் இதயம் ஒன்றும்!
பாறை அல்ல

கனவு கலைந்தது.. எதற்கான மோகம்?

க. பழனிவேல், ஜெயங்கொண்ட சோழபுரம்
01.!
கனவு கலைந்தது!
-------------------------!
கல்லூரி நாட்களில்!
கனவாகத் தெரிந்தவள்!
கலை இழந்து நிற்கிறாள்!!
மணம்முடித்துப் போனவளின்!
மருள்முகம் கண்டதும்!
மனம் கனத்து நின்றேன்!!
மாங்கலயம் தொலைத்து வந்தாள்!!
அவள் முகம் நோக்கி,!
மாங்கலயம் எங்கே என்றேன்?!
மணாளன் தொலைந்தான் என்றாள்!!
மணாளன் எங்கே என்றேன்?!
மரணம் தொலைத்தது என்றாள்!!
வாழ்வில் இருளுமாய்!
வயிற்றில் கருவுமாய்!
வழியற்று நின்றாள்!
விழி நோக்கி நின்றேன்!
மொழி இல்லை என்றாள்!
வழி காட்டி நின்றேன்!
விதி கூறி மறுத்தாள்!
காரணம் கேட்டால்!
காலனின் வேலையால்!
கறைப்பட்டுப் போனேன் என்றாள்!
அப்ப...!
காத்திருந்தவன் கதி.....!!
என்றேன்.!
கவனமாய் பதிலுரைத்தாள்!
கனவு கலைந்தது!
காலம் வென்றது என்று!!
!
02.!
எதற்கான மோகம்?!
--------------------------------!
காரியமும் தவறாது!
காரணமும் தெரியாது!
கவனமும் சிதறாது!
காட்சியும் மறையாது!
ஏனென்றும் விளங்காது!
எதனாலும் நிற்காது!
எல்லைக்குள் சுருங்காது!
எள்ளளவும் குறையாது!
அவளிடத்து எப்படியுரைப்பேன்!
என் காதலை?

என்னைத் தொலைத்த நான்

எம்.ரிஷான் ஷெரீப்
யுத்தப் பெருவெளியொன்றின்!
விஷக்காற்றினைச் சுவாசித்தபடி!
பேருவகை ஏதுமற்ற வாழ்வின்!
கடைசிச் சொட்டில் உயிர் வழிய!
காற்றின் துவாரங்களெங்கிலும்!
ஒழுகும் எனது பாடல்கள்!
துயரத்தைச் சோர்கின்றன !!
எனது கழுத்தை நெரிக்க!
நீளும் கைகள் !
எனது நண்பனுடையதாக இருக்கின்றன,!
எனது சுவாசம் பறித்துக்!
காறியுமிழும் வாயும் அவனுக்கிருக்கிறது,!
சுயநலத்தின் உள்ளங்கை!
அவன் தலைதடவி!
எனை நோக்கி அனுப்பியிருக்கிறது!
அவன் உறிஞ்சி விழுங்கிச் சிரிக்கும்படியாகவே!
என் உயிரும் நிரம்பி!
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது !!
ஒரு காலம் இருந்தது,!
அன்று நாம் அழகாயிருந்தோம்,!
இனிமையான பாடல்களும்,!
தென்றலும்,வாசனையும்!
எம்மைச் சூழ்ந்திருந்தது !
எந்தவித அச்சங்களுமற்று!
கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க!
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்!
நானுமவனும் மட்டும்!
நடைபயின்று களிப்புற்றோம் !!
ஒன்றான ரசனை எமை இணைத்த!
நாட்களின் முடிவில்!
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவனானான்!
அப்பொழுதுதான் முதன்முதலாக!
அவன் ஆயுதம் எனை நோக்கி நீண்டது !!
நட்பின் இறுதிச் சொட்டு!
நயவஞ்சகத்தைக் கோர்த்துவந்தது,!
எனைக் கொல்லத் தேடிவந்தது தெரியாமல்!
என் தாய் அவனுக்கு உணவிட்டாள் !!
எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?!
எந்தக் கணத்தில் !
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?!
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்!
உனக்கந்தக் கொலைக்கருவிகளை!
எனை நோக்கி நீளச்செய்தன ?!
எதற்காக நானன்று ஓடினேன் ?!
ஓடிச் சோர்ந்து,தவித்து,நின்று!
பாலைநிலமது !
பாதங்களை விழுங்கிக்கொள்ள,!
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்!
என்னையே தொலைத்த !
நானாகி நிற்கிறேன் பார்..!!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

பிம்பங்கள்

பாண்டித்துரை
பேருந்து பயணத்தில்!
பெயர் தெரியா முகங்களை!
கண்களின் பிம்பங்களில்!
ஒப்பிட்டு!
தளர் நடையில்!
மறதியாய் செல்லும் போது!
எங்கிருந்தோ கேட்கும் குரல்!
திரும்பிப் பார்த்தால்!
யாரோ! யாருடனோ?!
சொல்வதற்கு ஒன்றுமில்லாமல்!
தொலைபேசியில்!
மௌனமாய்!
தொலைந்த வார்த்தைகளை!
தேடிக் கொண்டு!
ஞாபகச் சிந்தனையால்!
கண்மூடி துஞ்சும் போது!
காரணமின்றி கடந்து செல்லும்!
காட்சிப் பிம்பங்கள்!
தலைவியாய்...!
கவிஆக்கம் பாண்டித்துரை

பிணம்!. .செருப்புத்தைக்கும்..அஞ்சல்

முனைவென்றி நா சுரேஷ்குமார்
பிணம்!..செருப்புத் தைக்கும் தொழிலாளி.. அஞ்சல்பெட்டி!
01.!
பிணம்!!
----------------------------!
ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்!
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட!
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?!
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?!
02.!
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
------------------------------------!
ஒரு ஜோடி செருப்பினிலே!
ஒரு செருப்பு அறுந்தாலே!
உடனேதான் தேடுவீரே!
என்னைத்தான் நாடுவீரே!
காலடியில் கிடக்கின்றேன்!
காலணிகள் தைக்கின்றேன்!
ஏளனமாய் யாருமெனை!
ஏறஇறங்கப் பார்க்காதீர்!
உழைப்பையே மூச்சாக்கி!
உழைக்கின்றேன் தெருவோரம்!
உருப்படியாய் கிடைப்பதுவே!
ஒருரூபாய் இரண்டுரூபாய்!
வெயில்தாங்கி மழைதாங்கி!
புயல்தாங்கி இடிதாங்கி!
புணரமைப்பேன் செருப்பைத்தான்!
எனக்கென்று கடையில்லை!
நடைபாதை கடையாச்சு!
கேட்டபணம் தாருங்கள்!
கேட்டதற்கு மேல்வேண்டாம்!
முகம்சுளித்துத் தரவேண்டாம்!
அகமகிழ்ந்து தாருங்கள்!
இலவசங்கள் தந்தென்னை!
இழிபிறவி ஆக்காதீர்!
இலவசத்தை விரும்பாத!
உழைப்பாளி நான்தானே!!!
!
03.!
அஞ்சல்பெட்டி!
-----------------------!
அன்பு குழைத்து!
அன்னைக்குத் தந்தைக்குத்!
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை!
பாதுகாக்கும் பெட்டகம்!
மழை பெய்தாலும்!
புயல் அடித்தாலும்!
வெயில் கொளுத்தினாலும்!
பொறுமையுடன்!
போராடிப் பாதுகாக்கிறது!
மடல்களை!
துணையாக யாரும்!
இல்லாவிட்டாலும்!
தனிமையாய் நின்று!
கடமையிலிருந்து விலகாமல்!
கவனமுடன் பாதுகாக்கிறது!
கடிதங்களை!
அலைபேசி மின்னஞ்சல்!
வந்தபிறகும்கூட!
இன்னமும் என்மனம்!
இலயித்துக் கிடக்கிறது!
மடல்கள் வழியே வெளிப்படும்!
பாசப்பிணைப்பில்