இதோ எனது பூமி!
என் கால்களுக்கடியிலிருந்து!
நழுவுகிறது!
அரசியல் ஆணிகளாலும்!
பிளவுமனக் கடப்பாறைகளாளும்!
ஓங்கி அடித்தவண்ணம்!
ஆக்கிரமிக்கும் !
ஆடங்காத உயிரினங்கள் போல!
ஆறாதநடனம் புரிகின்றனர்!
எனது உலகு!
பல கூறுகளாக்கப்படுகிறது!
வெடிப்புகளின் நுனியிலிருந்து!
கோசங்கள் புறப்பட்டு!
புலரும் திசையெங்கும்!
பீங்கான் கோப்பைகள் போல!
சந்தமாய் உடைகிறது பூமி!
இவர்கள்!
தம்மை தேவர் என்றும்!
அவர்களை அசுரர் என்றும்!
அறிவிக்கின்றனர்!
அவர்கள்!
இவர்களை அரக்கர் எனவும்!
தம்மை வானவர் எனவும்!
அறிக்கையிடுகின்றனர்!
அப்படியே!
வெடிப்புகளிலும்!
விரியும் பாதளங்களிலும்!
வீழ்ந்து தொலைகின்றனர்!
பிளவுபடும் பூமியில்!
மனிதன் என்ற ஒன்றை!
யாருக்கும் நினைவில்லை...!
இப்போது எனது பூமி!
என் கால்களுக்கடியிலிருந்து!
நழுவுகிறது!
வெடிப்புகளின் விரிசல்களில்!
நான்!
முகவரியற்றுத் தொலைந்து போகுமுன்!
நாளை!
எம் பேரன் வருவான்!
மனிதம் என்ற சொல்லை!
எங்காவது புதைக்கவேண்டும்
கவிதா. நோர்வே