உன் உடல் என்னும் வனாந்தரத்தில்!
ஆதிவாசியாய் அலைந்து திரிகிறேன் நான்.!
வனம் தரும் அத்தனை சாத்ய சுகங்களையும்!
நுகர்ந்து புழங்கி!
கிறங்கிக் கிடந்தது என் பேராசை.!
கானகத்தில் எழுந்த!
உன் மனமென்னும் கோவில் பாழ்!
என்று நொந்து புலம்பினாய் நீ.!
இதோ அர்ச்சனைப் பூக்களோடு!
விழுதுகள்தோறும் ஊசலாடி!
விரைந்து வருகிறேன் நான்...!
-----------------------------------------------!
விலக்கம்!
உனக்கும் எனக்கும் இருந்த!
ஈர்ப்புகள் அத்தனையும்!
ஆவியாய்ப்போன பின்னும்!
மிஞ்சியது என்னிடம்!
குளிர் நடுக்கும் அனாதை நாய்க்குட்டியாய்!
அண்ணாந்து ஏங்கி என் கால் சுற்றும்!
நம் காதல்தான்.!
அதன் கழுத்தினை நெறித்து நான்!
கொல்வதற்குள் தயைசெய்து எனக்கொரு!
காரணம் சொல்லிவிடு-!
அதைக் கொல்லாமல்!
இருப்பதற்கு

முத்து குமரன்