தலைப்பில்லாத என் கவிதை - நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

Photo by Pramod Tiwari on Unsplash

உயிரின் நிழலில்!
கசிந்து உருகும்!
காதல் விழிகள்!
எங்கு சென்றதுவோ..!
வழிகள் தோறும்!
காதல் கொடிகள்!
விரிந்து கிடக்கும்!
ஞாபக வெளியில்..!
இதயம் முழுக்க!
சுகந்தம் பரவும்!
இனிய நாட்கள்!
இனிமேல் வருமா?!
கைகள் கோர்த்து!
கடற்கரை மணலில்!
கவிதை படித்து!
நடந்த நாட்கள்..!
புல்வெளி தோறும்!
அமர்ந்த படியே..!
திட்டம் போட்டோம்!
வாழ்க்கை பற்றி...!
மழையில் நனைந்து!
இன்பம் நுகர்ந்தோம்.!
மாலைதோறும்!
சேர்ந்தே திரிந்தோம்..!
பட்டுப் பூச்சி!
போல நாமும்!
சுற்றித்திரிந்தோம்..!
சுகமாய் வாழ்ந்தோம்.!
யாரின் கண்கள்!
நம்மைச்சுட்டது!
காதல் கொடிகள்!
அறுந்து விட்டது.!
ஊரின் நினைவுகள்!
உரசும் போதுகளில்!
காதல் மனசும்!
கண்ணீர் விடும்..!
சோகம் நெஞ்சை!
துளைக்கும் எனினும்..!
தேம்பி அழத்தான்!
மனசு துடிக்கும்.!
காலக் கதவை!
திறந்து பார்த்தால்!
கண்ணீர் ததும்பும்.!
காதல் கதைகள்..!
எனதை உனதை!
நமதைப் போல
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.