ஈழத் தமிழர்களே !.. இன்பம் - இராஜ்குமார்

Photo by FLY:D on Unsplash

01.!
ஈழத் தமிழர்களே !!
------------------------!
கடவுளும் காத்திட வாரான்!
பகைவனும் பிழைத்திட விடான்!
ராமனும் இல்லான், !
உறுதுணை கன்னனும் பிறவான்!
ஈழமும் ச்சீய்! போங்கடா!
வீரங்குன்றிய மக்கள் என்று வெறுத்தாள்!
தமிழ் தாயோ பால் மார்பை அறுத்தே விட்டாள்!
தமிழர் சிறையில் கிடந்தார்!
புலம் பெயர்ந்த உறவுகளுக்கு மெழுகு பிடித்து கை ஓய்ந்து விட்டது!
இன்னும் இங்கு யார் உள்ளனர் ;!
எவர் எங்கள் உயிர் காப்பார் ;!
ஈழத்தமிழர்களே ! - நம் விதி முடிந்து விட்டது!
நம்மை கொல்லப்போகிறவர்களின் விதி தொடங்கி விட்டது .!
மகிழ்ந்து நம் மண்ணில் வீழ்வோம் !!
நாம் சிந்தும் ரத்தம் அவர்களின் நஞ்சு!
நாம் சிதறும் சதைகள் அவர்கள் ரத்த சதைகளை உறுஞ்சும் புழுக்கள்!
வாழ்க ஈழம் ! வாழ்க தமிழர் !!
02.!
இன்பம்!
------------!
தோன்றிட இனியும் இனிமைகள் உளதோ ?!
வேண்டிடும் வரையில் இனிவினைக் கொண்டேன்!
போதென நினைந்தேன் !!
இனிவரும் இன்பம் - உன்!
கொடைக்கே சான்று .!
தேனிசை அலைமடி உனதிதழ் கவிசேர்!
பாலிசை தருமதில் இருசெவி இழந்தேன்!
கோவில் முகமும் திருநீர் பன்னீர்!
யாவும் கொணரும் பக்தி உணர்ந்தேன்!
வாழ்வொரு நாளும் உன்னகை காணில்!
சூழ்பல பகையும் தூசிகள் போலவே !!
பின்னொரு துன்பம் நின்றிட பார்த்து!
பாவை உன்மொழி கேட்டு மறந்தேன்
இராஜ்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.