உறக்கம் எழுதும் கவிதை.. நீ பிரிந்த வேளையிலே..!
01.!
உறக்கம் எழுதும் கவிதை!
--------------------------------!
இந்த கனவுகள்..!
இரவில் விதைத்தால் விடிவதற்குள் !
பூத்துவிடும் செடி கனவு மட்டும்தான்..!
கனவுக்கு பசியெடுத்தால் !
நம்நேரத்தை சாப்பிட்டுவிடும்..!
அதிகாலை கனவுகள் கரைந்துபோய்விடுகின்றன !
பனித்துளியின் அடர்த்தியில்..!
அவளுக்காய் காத்திருக்கிறபோது அவள் வரவில்லை. !
இந்த கனவு மட்டும் தவறாமல் வருகிறது..!
ஏய் கனவே உறங்குவது போல !
ஒரு கனவை கொடு அப்போதாவது உறங்கிகொள்கிறேன்..!
எல்லா கல்லறைகளிலும்!
ஏதாவது ஒரு கனவும் சேர்த்தே புதைக்கப்படுகிறது..!
02.!
நீ பிரிந்த வேளையிலே..!
-------------------------------!
தீ!
திரியை பிரிகின்ற பொழுதில் தீக்குள் நிகழும்!
படபடப்பை போல என் இதயம் நீ பிரிந்த வேளையிலே..!
எதிர் எதிரேஇருவரும்!
பிரிந்து கடந்து போகிறோம்!
நம் மௌனம் மட்டும் ஒன்றாய் போகிறது!
தினமும் உதிக்கும்சூரியனாய் இரு!
சுட்டெரித்தாலும் தாங்கி கொள்வேன்!
குளிரும் பௌர்ணமியாய் வேண்டாம்!
பிரிவை தாங்கி கொள்ள!
என் இதயம் ஒன்றும்!
பாறை அல்ல
தை.ரூசோ