பிணம்!..செருப்புத் தைக்கும் தொழிலாளி.. அஞ்சல்பெட்டி!
01.!
பிணம்!!
----------------------------!
ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்!
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட!
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?!
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?!
02.!
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
------------------------------------!
ஒரு ஜோடி செருப்பினிலே!
ஒரு செருப்பு அறுந்தாலே!
உடனேதான் தேடுவீரே!
என்னைத்தான் நாடுவீரே!
காலடியில் கிடக்கின்றேன்!
காலணிகள் தைக்கின்றேன்!
ஏளனமாய் யாருமெனை!
ஏறஇறங்கப் பார்க்காதீர்!
உழைப்பையே மூச்சாக்கி!
உழைக்கின்றேன் தெருவோரம்!
உருப்படியாய் கிடைப்பதுவே!
ஒருரூபாய் இரண்டுரூபாய்!
வெயில்தாங்கி மழைதாங்கி!
புயல்தாங்கி இடிதாங்கி!
புணரமைப்பேன் செருப்பைத்தான்!
எனக்கென்று கடையில்லை!
நடைபாதை கடையாச்சு!
கேட்டபணம் தாருங்கள்!
கேட்டதற்கு மேல்வேண்டாம்!
முகம்சுளித்துத் தரவேண்டாம்!
அகமகிழ்ந்து தாருங்கள்!
இலவசங்கள் தந்தென்னை!
இழிபிறவி ஆக்காதீர்!
இலவசத்தை விரும்பாத!
உழைப்பாளி நான்தானே!!!
!
03.!
அஞ்சல்பெட்டி!
-----------------------!
அன்பு குழைத்து!
அன்னைக்குத் தந்தைக்குத்!
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை!
பாதுகாக்கும் பெட்டகம்!
மழை பெய்தாலும்!
புயல் அடித்தாலும்!
வெயில் கொளுத்தினாலும்!
பொறுமையுடன்!
போராடிப் பாதுகாக்கிறது!
மடல்களை!
துணையாக யாரும்!
இல்லாவிட்டாலும்!
தனிமையாய் நின்று!
கடமையிலிருந்து விலகாமல்!
கவனமுடன் பாதுகாக்கிறது!
கடிதங்களை!
அலைபேசி மின்னஞ்சல்!
வந்தபிறகும்கூட!
இன்னமும் என்மனம்!
இலயித்துக் கிடக்கிறது!
மடல்கள் வழியே வெளிப்படும்!
பாசப்பிணைப்பில்
முனைவென்றி நா சுரேஷ்குமார்