தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்!
தொலைந்துவிட்டது போல்!
முடக்கப்பட்ட அவனது!
முழங்கால்களிரண்டும் தோன்றும்.!
வலதுகைவிரல் மடிப்புகளால்!
வாரப்படாது கோதிவிடப்பட்ட!
முடிகளின் ஒருபகுதி - மாதர்!
முக்காடிட்டதுபோல் தோன்றும்.!
நுளம்புத் தொல்லை என்று!
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து!
நிமிர்ந்து கையில் அகப்பட்ட!
நாசினியை விசிறும் போதும்,!
பன்னிரண்டு மணிக்கு மேல்!
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்!
முழங்கால்களும் வலது கையும்!
முடிகளின் ஒரு பகுதியும்,!
அப்படித்தான் தோன்றும்!!
அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்!
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!!
தொடைகளுக்குள் அல்ல!
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்