01.!
உன்னைப் போலவே!
---------------------!
உன்னைப் பார்ப்பதற்காய்!
சாளரம் திறந்து!
காற்றை உள் இழுக்கின்றேன்!
வழமை போல் ஏக்கமுடன்!
சிமிட்டிச் சிமிட்டி ஒளிர்கின்றாய்!
என் தோழியைப் போல!
உன் வருகை எனக்கு!
அவளையே நினைவுறுத்தும்!
வந்தவை தவிர்த்துப்!
பேரங்கள் பேசி!
இன்றவள் இரந்து!
கையேந்தி நிற்கின்றாள்!
ஒரு கல்யாண மாலைக்காக!
அது பெற்றவரெல்லாம் !
பாக்கியசாலிகளல்ல என்பது!
எனக்குத்தெரிந்தும்!
இரக்காதே எனக்கூற!
என்னிடமோ தைரியமில்லை!
நான் சொன்னால் அவள்!
கேட்டிடுவாளென்ற!
சொட்டு நம்பிக்கையும்!
என்னிடமில்லை!
திருமணம் தான் !
சொர்க்கத்தின் வாசலெனும்!
சமுதாயப் பிரதிநிதிகள் நாங்கள்!
எப்படி தவிர்த்திட முடியும்!
அவளே நீயாகத் தெரிகின்றாய்!
கிளி குருவி குரும்பட்டிச் சாத்திரம்!
கேட்டுக் கேட்டு!
அவளுடனே காத்திருந்தேன்!
ஒளிக்கீற்றின் ஒரு பொட்டேனும்!
தெரிகின்ற அசுமாத்தம்!
இல்லவேயில்லை!
சந்தடியற்ற இரவுகளைத்!
தனதாக்கி விழி மூடாது!
எல்லையுடைக்கும் !
மனதை அரவணைத்து!
ஆறுதல் சொல்லி!
காலத்தின் நகர்வையெண்ணி !
பெருமூச்செறிவாள்!
நேரம் ஆக இரவும் குறையும்!
நீயும் ஒளி மங்கிப் போவாய்!
என் தோழியும்… உன்னைப் போலவே!
02.!
கனவு!
----------!
ஓங்கி ஆர்ப்பரித்து நீர் சிதைத்துப்!
தொப்பென வீழ்ந்து!
புரண்டலைந்தது அலை!
வாரியிறைத்த புளுதி சுமந்து!
மூசி மூசிக் காற்றும் சுழன்றது!
வாளாதிருந்தது மானிடம்!
சிருங்கார நிழல் சுமந்த!
மாமரமெல்லாம் பாறி முறிந்து வீழ்ந்தது!
அச்சம் எங்கும் அச்சம்!
மென்மை ரூபமென்றவரெல்லாம்!
வாய் பிளந்து பின் ஒடுங்கி நிற்க!
வீச்சுக் கூடி வானம் அசைந்தது!
தட்டுமுட்டுச் சாமானுடன்!
சமையலறைப் பாத்திரங்கள் உருண்டு!
மூலை தேடியொழித்தன!
தாவியோடி யன்னல் சாத்தக்!
கைகள் கிழித்துக் குருதி பாய்ந்தது!
மாசுற்றதால்!
கௌரவம் அம்மணமாயிற்றென்றவரே!
கஞ்சல் குப்பை கலந்து!
வேஷங்கள் களைந்து!
தலைவிரித்தாடுகின்றேன்!
பார்த்துப் போ; அடங்கிப் போ!
உக்கிரச் சொல்லின் தீப்பிழம்புகள்!
காதுமடல் எரித்தன!
ஐயோ!!
எங்கோ ஓர் ஆண்மைச் செருமல்!
ஒருக்கழித்துப் படுத்துக் கொண்டாள்
கனிகை