தமிழ் எங்கள் உயிருக்கு மேல் - இரா.இரவி

Photo by FLY:D on Unsplash

தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு!
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று!
மற்றவர்களுக்கு உயிர்தான் மேல்!
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்!
தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்!
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்!
தமிழைப் பழிப்பவர்களை நாங்கள்!
தாயே தடுத்தாலும் விடமாட்டோம்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி!
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி!
அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி!
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி!
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி!
பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி!
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி!
பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி!
தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி!
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை!
தமிழின் மகுடமான திருக்குறளுக்கு!
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்
இரா.இரவி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.