01.!
தூளி !
-----------!
வளர்ந்ததும் தொலைந்திடும்!
குழந்தைமை பற்றி!
யாருக்கும் அக்கறையில்லை!
பிஞ்சு நெஞ்சத்தில்!
நஞ்சை விதைக்காத!
மானிடர்கள் எவருமில்லை!
பயமுறுத்த வேண்டும்!
என்பதற்காகவாவது!
சொல்லி இருப்போம்!
பேய்க் கதைகளை!
குடுகுடுப்பைக்காரனை!
பூச்சாண்டி எனக்காட்டி!
அச்சுறுத்தி!
சாப்பிட வைப்போம்!
எவ்வளவு!
கவனத்தோடிருந்தாலும்!
தவறுதலாகவாவது!
விஷத்தை விதைக்க!
வேண்டிவரலாம்!
கவனமாகக் கையாள வேண்டிய!
கண்ணாடிப் பாத்திரம் போன்றது!
பால்யம். !
02.!
தருணம் !
------------------!
பரிதியைக் காணோம்!
வானில் பரிதியைக்!
காணோம்!
வனத்தில் திசைதெரியாமல்!
தொலைந்ததா!
கள்வர்கள் கைகளில்!
அகப்பட்டுக் கொண்டதா!
எரிந்து எரிந்து!
சாம்பலாய்ப் போனதா!
ராட்சச பாறைகள் மோதி!
தூள் தூளாய் ஆனதா!
மக்களின் செயல்களைக்!
காணப் பிடிக்காமல்!
மலைகளின் இடையே!
ஒளிந்து கொண்டதா!
நிலவிடம் பந்தயம் கட்டித்!
தோற்றதா!
இருளைக் கிழித்து ஒளியைப்!
பரப்பும் வேலையில்!
அலுப்பு தட்டிவிட்டதா!
இயற்கைக்குப் பயந்து!
நடக்க முடியாதென!
மானிட இனத்தை!
முழுமையாக கைவிட்டு!
விட்டதா. !
03.!
அழுகை !
----------------!
நீர் நிலையில்!
மீனைக் கொத்திச் செல்லும்!
மீன் கொத்திப் பறவையின்!
பிம்பம் நீரில் விழும்!
மீனைப் பிரிந்த!
துக்கம் தாங்காமல்!
நீர் கேவியழும்!
துளித்துளியாய் மழை!
குடை மீது விழும்!
உன்னையும் கொஞ்சம்!
நனைக்கவா என்று!
கேட்டபடியே!
மழை விடைபெறும்!
காலை வருடிச் செல்லும்!
அலைகள்!
கண்டுபிடித்துவிடும்!
காதலியுடன் வந்திருப்பதை!
விட்டில் பூச்சி!
சுடரில் மோதி இறந்தது!
நெருப்பின் கைகள்!
நாலா பக்கமும் நீண்டது!
பரிதி மறைந்ததும்!
இருள் சூழ்ந்தது!
இரவின் ஆகிருதி!
விகாரமாய் இருந்தது

ப.மதியழகன்