வெளிச்சம் செத்து!
இருள் உயிர்த்த பொழுதில்,!
வெள்ளைக்காகத்துடன்!
உரசிப் பார்த்தது கறுப்புக்குயில்….!
பூங்கா நாட்காலியில்-!
ஆயாசமாய் உட்கார்ந்திருந்த!
என்!
பிடரியிலும் வலித்து.!
‘எனக்கான நிலம் இதுவல்ல.’!
என் பொழுதுகள் விடியமுன்!
இயந்திரப் பேய்களால்!
துரத்தப்பட்டேன்.!
இந்த பொழுது!
எனக்கானதுமில்லை.!
குளிர் நெருப்பு சுடும்!
உஷ்ணக்குளிர் விறைக்கும்.!
நீ எனக்க சொந்தமாயில்லை.!
என் முன்னால் நின்று!
நீ அன்னியன்!
என அறைந்து சென்றது வெள்ளைக்காற்று.!
வேருடன் பிடுங்கி எறியப் பட்ட!
தேசத்தில்!
குரங்குகள் ஆக்கிரமித்த படி….!
யாரிடம் கேட்பது?!
என் தேசத்தை கண்டீரா என!
தூரத்தே!
நாய்களின் ஊளையிடலில்!
என் எதிர்காளம் அகதியாய் கழிகிறது!!
!
-முல்லை அமுதன்!
09-05-08
முல்லை அமுதன்