முற்றுந்தான் பாவத்தை முனைந்தழித்த(து) உண்மையெனில்!
எற்றுக்கோ மனிதருளே எம்போன்றோர் பிறப்பதுவும்?!
பற்றுக்கொண்(டு) உம்முள்ளே பரிதவிப்பும் இல்லாமல்!
உற்றபிதா கட்டளையை உச்சிகொண்ட காரணமோ?!
இச்சிப்பும் பற்கடிப்பும் இழிகுணமும், உடலெனுமோர்!
‘தச்சுவைத்த சட்டை'யெனத் தந்தனுப்பும் காரணமேன்?!
மெச்சிவைத்துக் கொள்ளுமொரு விளையாட்டொ இது?சொல்லும்!!
அச்சுக்குள் பிழைவைத்தே அடித்தடித்துத் திருத்துவதேன்?!
எங்கணும் பொருளை ஈட்ட, ஏற்றநல் வழிகள் கண்டோம்;!
இங்கொரு வன்,மாற் றானை ஏற்கவும் இணைந்து கூடித் !
தங்கவும், தயவு காட்டித் தாங்கவும் ஏது செய்வோம்?!
மங்கிடும் மனிதம் என்றால், மற்றைய உயர்வும் யாதோ?!
உண்பதற்(கு) ஏங்கி டாமல் உடுத்தியே களித்தி டாமல்,!
கண்படக் கலங்கு வாரைக் கைநெகிழ்த்(து) ஒதுக்கி டாமல்,!
புண்படப் பேசி டாமல், பொய்யுரை நிகழ்த்தி டாமல்,!
உண்மையின் வாழ என்னை உள்ளிருந்(து) இயக்க வாரும் !!
எசேக்கியல் காளியப்பன்