மனசில் பாரச்சிலுவைகளுடன் !
உயிரின் இருப்புக்காய் குழந்தைகளின் பயணம்!
மலைகளின் பெருவெளியில் !
கபாலங்களையும் எலும்புத் துண்டங்களையும் !
மிதித்து நடக்கிறார்கள்!
தொலைந்து போன உறவுகளின்!
சிவப்புக் கோடுகளை நெஞ்சில் சிலுவையாய் வரித்து!
கரிக்கும் கண்ணீரைப் பருகி நடக்கிறார்கள்!
அதர்ம ஒலி எழுப்பி கொடிய இரத்த வெறியை !
ஆணிகளாலும், கோடரிகளாலும்; மன்னர்கள்!
புண்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்!
குழந்தைகள்!
தங்கள் ஆத்மாக்களை!
கல்வாரியின் மலைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு!
மடிந்தது போக எஞ்சியவற்றுடன் நடக்கிறார்கள்!
இப்போது!
எல்லோருமே அழுகிறார்கள் !
மன்னர்களால் கொல்லப்படுவதற்கு!
இன்னும் எங்களிடம் உரிமைக்கான நியாயங்கள் இருக்கிறதா?!
- விசித்ரா
விசித்ரா