கடந்த தேர்தல் முதல்!
இத்தேர்தல் வரையிலும்!
ஏற்பட்ட கழிவுகளையும்!
களைகளையும் களைந்து!
சனநாயகத்தைத் தூய்மை படுத்திட !
சனநாயகம் அளித்திடும் !
அரிய வாய்ப்பு!!
சமூக விரோத சக்திகளை!
இனம் கண்டு!
பாடம் புகட்டிட!
மீண்டும்!
ஓர் சந்தர்ப்பம்!!
சனநாயகக் கடமையாற்றிட!
முன் வரவேண்டியவர்கள்!
முன் வாராமையால்!
நாற்காலிகளே!
நாற்காலிகளுக்காக!
மோதிக் கொள்கின்றன!!
வாக்களிப்போரிலும்!
பெரும்பாலோர்!
மனசாட்சியை !
உறங்க வைத்துவிட்டு !
வாக்குச் சாவடிக்குச் செல்வதால் !
நாற்காலிகளே-மீண்டும்!
நாற்காலிகளை அலங்கரிக்கின்றன
இமாம்.கவுஸ் மொய்தீன்