பூவாய் மலரும் நாள் - வேதா. இலங்காதிலகம்

Photo by Freja Saurbrey on Unsplash

பூவாய் மலருமொரு நாள்!
பூமியில் இந்த நாள்!
பூவாசனை வீசட்டும் செயலில்.!
பூரிப்பை அள்ளித் தரட்டும்.!
புது அனுபவம் காத்திருக்கும்!
புதுச் சரித்திரம் தொடங்கலாம்.!
பூத்திடும் பல முயற்சிகள் !
பூரணத்துவம் ஆகலாம் நிதம்.!
நீவிடும் பூபாளமாய் விரியும்!
நாள் எம்மை ஆள்கிறதா!!
நாளை நாம் ஆள்கிறோமா!!
கோள்களின் வெற்றி வினையா!!
புதிய உயிர் பிறக்கும்.!
புன்னகை, புளகாங்கித நாளாகும்.!
புகழுடை உயிர் மறையும்!
புதிராகித் துயில் துறக்கும்.!
அவமானம் அள்ளி வராத !
சுயமானம் காக்கும் ஒரு!
வெகுமானம் நிறையும் நாளாகிக் !
கவலைகள் தெரியாத நாளாகட்டும்.!
அருவியென அறிவுச் சாரலான!
அரும் வாசிப்பில் மூழ்கும் !
ஒரு விவரத்திரட்டான !
பெரும் அறிவு நாளாகட்டும்.!
நுரை பொங்கி அருவருப்பூட்டி!
திரையிடும் பல வினைகளிற்கு !
இரையாகும் நாளாகவின்றி!
இரையாகாத நன் நாளாகட்டும்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.