குழந்தைச் செல்வங்கள், குமுதமலர்க் கொத்துகள்.!
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.!
உவகைமிகு சர்வதேச உயிர்ச் சிலைகள்.!
உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள்.!
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற!
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.!
!
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்!
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.!
மனவாதை இருளின் ஒளி தேவதைகள்.!
மனங்கவர் புன்னகை, மழைமின்னற் கீற்றுகள்.!
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.!
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.!
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்!
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.!
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.!
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.!
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,!
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.!
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,!
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,!
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,!
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,!
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.!
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்