என் வீட்டுதொலைபேசியில்!
இரண்டு மணியடித்து நின்று!
இரண்டாவது!
அழைப்பு வந்தால்,!
எதிர் முனையில்!
நீயிருக்கிறாய்!
என்று அர்த்தம்.!
பிழையான எண்!
எனக்கூறி!
நான் பின் வாங்கினால்!
அருகில்!
அப்பா இருக்கிறார்!
என்று அர்த்தம்.!
இப்படி எத்தனையோ,!
எத்தனையோ.....!
விளையாட்டு!
இப்போதும் தொடருகிறது.!
ஆட்டத்தில்!
தங்கையுடன் யாரோ..!
நான்!
தொலைபேசி!
தொடுவதையே!
துறந்துவிட்டேன்!
யார் கழுத்திலோ!
நீ தாலி கட்டியதிலிருந்து!!
இந்த தொலைபேசி!
தங்கைக்காவது!
வாழ்க்கையை!
வாங்கித்தருமா,!
இல்லை!
மணமாகாத விதவையாய்!
அவளையும்!
விட்டுவிடுமா?!
!
கவசங்களும் காயப்படுத்தும்..!!
!
முட்களை!
எனக்கு!
காவலென்றுதான்!
கருதியிருந்தேன்.!
தென்றல் காதலன்!
தீண்டியதும்!
முதுகை காயப்படுத்தியபோதுதான்!
புரிந்தது!
பூக்களுக்குமட்டுமல்ல!
காதலுக்கும்!
முட்கள்!
எப்போதும்!
எதிரியே என்பது!!
!
காலம் மருந்தா, திராவகமா?!
!
எல்லா காயங்களையும்!
ஆற்றிவிடும் வல்லமை!
காலத்திற்கு உண்டாம்!!
அது ஏன் காதலி!
என் காயங்களை மட்டும்!
காலம்!
ரணமாக்கிக்கொண்டே இருக்கிறது!
உன்னை கனவனோடு!
காண்பித்து,!
காண்பித்து?!
!
நானும், நீயும், காதலும்..!!
!
என் ரணங்களையும்!
வலிகளையும்!
சுமந்து!
ரத்தம் சொட்டச்சொட்ட!
வந்து நிற்கிறேன்!
உன் வாசலில்!
நம் காதல் வேண்டி!!
காதலை!
கோமோவாக்கி!
உள்ளே நீ!
உன் குழந்தையுடன்!
விளையாடியபடி....!!
சாமர்த்தியமா, சதியா?!
!
ஒரே நேரத்தில்!
ஒரு கண்ணால் சிரிக்கவும்!
ஒரு கண்ணால் அழவும்!
உனக்கு!
சாத்தியப்படுவது எப்படி?!
இது!
சாமர்த்தியமா,!
இல்லை!
சதியா?!
இது!
நம் காதலை வளர்க்குமா,!
இல்லை!
என் உயிரை எடுக்குமா?!
!
காதல்!
நான்!
கோபமில்லாமல்!
மிகவும்!
கோபப்படுகிறேன்.!
நீ!
வார்த்தைகளில்லாத மொழியில்!
வசைபாடுகிறாய்.!
நம் காதல்!
சிரித்து நிற்கிறது!
மகளின் வடிவில்!
வலியே இல்லாமல்!!
எதார்த்தம் வலியதா இதயத்தை விட!!
!
தீயாய்!
இருந்த எனக்கு!
திரியானாய்!
நாராய்!
இருந்த என்னில்!
பூவானாய்!
அன்பாய்!
இருந்த போது!
தோழியாய்!
என் கனவுகளின்!
அதிபதி நீ!
என் கவிதைகளின்!
ராஜகுமாரி நீ!
என் ஆத்மாவிற்கு!
நீதான் ஜீவன்!
என் சொகுசுவாழ்விற்கு!
நீதான் வத்திரதாரி!
என் ஆயுள்வரை!
நீதான் காதலி!
ஆனாலும்!
என் மணமேடையில்!
விருந்தாளியாய்!
நீயும் உன் கனவனும்

சிலம்பூர் யுகா துபாய்