விரிந்த உலகில் வழிவழியாக!
உரிமைகள் தொடர்வது இனிமை பெருமை.!
உரித்துடன் தானாகவும் வரும் உரிமை,!
வரிந்து கட்டிக் கொண்டும் பெறப்படும்.!
உரிமைகள் நெரிபட்டு அழிவதுமுண்டு.!
உரிமையின் உரித்தாளர் ஊமையாவதால்!
உரிமைகள் தானாக அழிவதும் இயற்கை.!
அரிய எம்முரிமைகள் தாயகத்தில் சரிந்துள்ளது. !
உரித்துடை சிறுபான்மைத் தமிழருக்கு!
உரிமைகள் காலாதி காலம் மறுக்கப்பட்டது.!
நரித்தன அரச ஒடுக்கு முறைகளால்!
காரிருளாய்க் குவிகிறது துன்ப மேகங்கள்.!
பேரினவாதம் பேயாட்டம் ஆடுகிறது.!
சாம, பேத, தான தண்டமாக!
சனநாயகம், அகிம்சை வழி முடிந்து!
சமர் எனும் தண்டம் நடக்கிறது.!
ஓரினம் தன்னை ஆள நினைப்பது உரிமை.!
வேரினை அழித்து இனத்தை ஒடுக்கி!
ஊரினை அழித்து மாற்ற நினைப்பது!
பேரினவாதப் போராட்டம் தான். சமாதான காண்டம், தூது காண்டம்,!
அமைதி காண்டம் இன்று ஒரு!
போர்க் காண்டமாகி உரிமைக்கான!
போராட்டமாகிறது, வாரோட்டமாகிடுமோ?!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
28-4-08

வேதா. இலங்காதிலகம்