இன்னுமெந்தன் காதில் - வேதா. இலங்காதிலகம்

Photo by Jan Huber on Unsplash

இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்...!
பின்னுகிறது பழமை வேதமாக!!
இன்னுமெந்தன் கனவில் உருவம்..!
சின்னத்திரை போல் மின்னுகிறது!!
இன்னும் நீங்கள் பூவுலகில் தினம்!
பின்னும் நினைவில் என்னுடன் தானம்மா!!
!
நீங்கள் இல்லை என்று எதற்காக!
நான் இங்கு கலங்க வேண்டும்!!
நீங்கள் என்றும் என்னுள் தானம்மா!!
நீங்களென்னை விட்டுப் போகவில்லை!!
நான் மறந்தாலன்றோ நீங்கள் விலகுவதற்கு!!
தேன் நினைவுகளில் நான் தர..தன..னன..னா..!
!
பொறுமையெனும் பெரும் ஆயதம் தந்தீர்கள்!!
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து!
பக்குவமாயன்று நடை பயில வைத்தீர்கள்!!
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று!!
என் மனிதத்தின் சாவியே நீங்களும்!
என் அப்பாவும் தானேயம்மா!!
!
விநாயகராய் உங்களைச் சுற்றினேன்!!
விளக்கமிகு வாழ்வுக் கனி ஏந்தியுள்ளேன்!!
அன்னையர் தினமென ஒரு நாளாம், நான்!
எண்ணுவது அன்றல்ல, என்றுமே தான்!!
நன்றிகள் நவில்வது நாளும் தானம்மா!!
குன்றிடா வாழ்த்துகள் அகிலத்து அன்னையருக்கு!!
-வேதா. இலங்காதிலகம்.!
டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.