இரவல் தேசமிது - வேதா. இலங்காதிலகம்

Photo by FLY:D on Unsplash

18-10-2007.!
வரலாற்றுத் தாய்மண்ணை விலகி வந்த!
இரவல் தேசமிது, வாடகை வாழ்விது.!
தரளம் விளைவதாய்த் தந்திடும் தரிசனமது.!
வரவும் செலவும் வரம்பின்றி வளர்ந்து!
அரவம் ஊர்வதாய் அருட்டும் உணர்வது.!
நரகமும் சொர்க்கமும் நலங்கிடும் நாடிது.!
பரவசம் மேலாக தைலமாய் மிதப்பது. !
நிரவுதல், பூரணமெனும் மாயம் தருவது.!
விரட்டும் குளிரில் எம் விதியின் எழுத்து!
உரலில் அகப்பட்ட உலக்கையாய்ப் !
புரட்டிப் பலரை நோயில் அழுத்துவது.!
தரவின் தருணத்தைத் தக்கபடி பாவிக்கும்!
இரசவாதம், இராசதந்திரம் பலருக்குமுண்டு.!
தரமுடை எம் இன அறிமுகத் தமிழ்!
சிரம் சாய்க்கச் சிலர் துணையாவதும்!
கரம் கொடுத்து உயர்த்தப் பலருமாயிங்கு.!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.