01.!
அவசரம்!
----------------!
அவசரம் ஒரு குறை வரம்,!
அவலம் பெருக்கும் அந்தரம்.!
அவதி அவதியாய்ப் படும் அவசரம்!
அவஸ்தையான மன நெரிபாடு.!
அவசரம் மனிதனுக்கு அவசியமற்ற!
அவப்பொழுதை உருவாக்கும்.!
அவசர காரியம் சிதறிப் போகும்.!
அவசர உணவும் புரையேறிப் போகும்.!
தேகம் படபடத்து நிதானமிழக்கும்.!
நாகரிகமின்றி வார்த்தைகள் நழுவும்.!
வாகாக வேலைகள் வாகை பெறாது.!
தேகாரோக்கியமும் அவசரத்தால் நழுவும்.!
அவதானமாய்ச் செய்யும் செயற்பாடு – மனம்!
உவகையாய்க் கொள்ளும் சுகப்பாடு.!
பத்திரமான நிதானமும் நிறைவும் ஒரு!
மொத்தமான பூரண பலன் தரும்.!
!
02.!
அலுக்காத வசீகரம்….!
---------------------------!
பரந்து விரிந்து, விழிகளுக்கு விருந்தாகி!
பரவசம் தந்து பளிச்சிடும் கோல எழில்.!
பிரமிப்பூட்டும் அழகிய வானமே நீ!
இரகசியம் நிறை தரவல்லவோ! உலகிற்கு!!
மின்னும் சூரியக் கதிர் சோபையில்!
உன்னைச் சூழ்ந்த நட்சத்திரத் தேவதைகள்!
என்னவாகிறார்கள் சொல்! பயணத்தில்!
என்னோடு தினம் ஓடும் வானமே!!
என்னுள்ளமள்ளும் கடல் நீலக்குடையே!!
உன் தவசியான மோனம் ஊருக்கும்!
என் மன அமைதிக்குமொரு தானம்.!
கண்களுக்குத் தினம் அலுக்காத வசீகரம்
வேதா. இலங்காதிலகம்