மறந்தது எப்படி!..வறுமை.. வெண்ணிலா - வேதா. இலங்காதிலகம்

Photo by Julian Wirth on Unsplash

மறந்தது எப்படி!.. வறுமை..வெண்ணிலா விவேகம்!
01.!
மறந்தது எப்படி! !
------------------------!
!
உறியில் உப்பிருந்தும் கண்ணே!!
கறியில் உப்பிட மறந்தது எப்படி!!
கண்ணாடியை முகத்தில் மாட்டியபடி!
கண்ணாடியை தேடுகிறாயே செல்லம்!!
தேனீருக்கு சீனி கலக்குவதாய் அன்பே!
உப்பைக் கலந்தாயே மறந்தது எப்படி!!
இரண்டாவது மாடிக் கதவு துவாரத்தில்!
சாவியிட்டுத் திறக்க எத்தனித்தாயே!!
மூன்றாவது மாடியில் வசிப்பது மறந்தது எப்படி!!
கதையல்ல, விவாதமல்ல, கவிதைக்கொரு!
கவித்துவத் தலைப்பிட மறந்தார்கள் எப்படி!!
மறதி என்பதொரு மயக்கமா!!
மனித வாழ்வில் வருமொரு பலவீனமா!!
இளமையில் மறதி அது என்ன!!
முதுமையில் மறதி அது என்ன!!
!
02.!
வறுமை!
-----------------!
!
உணவின்மை, பணமின்மை,!
அறிவின்மை, பொருளின்மை!
பாதுகாப்பின்மையெனும் பல!
இன்மைத் தோப்பு வறுமை.!
மொழி வறுமை, இனவறுமையால்!
இடம் பெயர்ந்து அல்லலுறுகிறோம்.!
துன்பம, தரித்திரம், கதியற்ற!
தன்மைகளின் கொடுமை வறுமை.!
பாதுகாப்பின்மை இன்றி!
ஏதுமற்ற தமிழர் நிலை.!
யாதும் இழந்து எம்!
முதுகு கூனிய நிலை.!
பணமின்மை பரிதாபமாய்க் !
குணம் மாற்றும். அறிவு !
மணமும் காற்றோடேகும்.!
பணமற்றவன் பிணமென்பார்.!
அறிவின்மை நெறியற்ற,!
குறிதப்பிய, வாழ்வுப்!
பொறியில் வீழ்த்த!
பறிக்கும் குழி.!
உணவின்மை கொடிது.!
உணர்வைப் பறித்து!
மானம் மரியாதையையும்!
தானமாக்கும் வயிற்றுக்காய்.!
பொறுமை இங்கு!
வெறுமையைக் கூட்டும்.!
வறுமையின் எதிர்ப் பயணம்!
சுறுசுறுப்பான மானுடவினை.!
வறுமைச் சிறையுடைக்க!
வெறிச்சோடிய வாழ்வைக்!
குறிவைத்து முறி!.!
எடு! விடாமுயற்சியை!!
!
03.!
வெண்ணிலா விவேகம்!
-------------------------------!
!
இலகுவில் இணக்கமுறா ஒற்றுமையால்!
விலகிப் பிளவுறும் நாடுகள்,!
உலகில் மூளுகிறது போர்.!
கலகங்களின் காரணம் மனப்!
பலகணி ஊடாகத் தெரிகிறது.!
விலகும் விவேகமே தான்!
நிலவாகாத விவேகம் தான்.!
நற்புத்திரராய் மனிதர் உலாவ!
சற்புத்திரராய் வாரிசுகளை உருவாக்க!
கற்றவர்கள் உலகில் நிறைய!
புற்றுநோயான போதைப் பொருள் விலக!
சற்றும் உதவாத மதுவை விலக்க!
சுற்றியுள்ளோருக்கு வேண்டும் விவேகம்.!
தரணியில் தோரணமாகும் விவேகம்!
அரணாக விளங்கும் அறிவு!
இரணங்களற்ற வழி காட்டும்.!
சரணாலயமான விவேகக் கூரையுள்!
பூரணமாகப் புனையலாம் சாதனைகள்.!
உதாரணங்கள் உலகில் ஏராளம்.!
தமிழனின் அடையாள மொழியான!
தமிழை வளர்க்க வேண்டும் விவேகம்.!
அனுபவம் பொன்னாகும். விரிவாக!
அதைச் சிந்திக்க, வேண்டும் விவேகம்.!
காலப் பிரமாணமறிந்து இயங்க!
கருத்தான விவேகம் வேண்டும் உலகில்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.