சத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!!
ரத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!!
வித்தனே!...அழகான..... எத்தனே!!
சித்தமின்றி யுத்தம் உன்னுடன் அன்பே!!
தத்திதத்தோம் ஸ்வரஜதியோடு!
சித்தித்து மகிழ்ந்த சிங்காரப் பூங்கா!
எத்திக்கும் எழிலாய் வியந்த வாழ்வு!
அத்திப்பூவாய் இதழ் வாடிட!
தித்திப்புச் சுவை மாறித் திணறுவதேன்!!
பத்திக்கும் பல கண்கள் பட்டிட்டதோ!!
அங்கங்கள் முடங்கிப் போர்வையுள் அடங்கும் உடலாக!
அன்றாட நிகழ்வுகள் முடங்கி மன்றாடும் போர்க்களமேன்!!
இடைவெளிகள் விரிந்து குடை விரித்து இருண்டு!
படை கொண்டு கொல்லும் போர்க்களமேன்!!
சுதந்திர வாழ் இன்பக் காற்றை!
சுருக்குகின்றாயே..காற்றடைக்கும் உறையுள்!....!
பின்னிய கனவைக் குலைத்து!
அன்னிய நினைவை விதைப்பது ஏன்!!
முத்தம் மோகம் மொத்தமாக எதுவுமில்லை.!
புத்தனுமில்லை நீ! சித்தம் தெளிந்திடு!!
பணம் மாளிகையெனும் ஆளுகை வேண்டாம்.!
அமைதிக் காற்றின் சூழுகை போதும் வா!!
மனச் சாந்தியின் தாழிசை போதும் வா
வேதா. இலங்காதிலகம்