துன்பநிலை வாழ்வில்தானாக வருவதில்லை,!
அந்நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.!
சொந்த மனதில் சோதனை, விரக்தி நிறைந்தால்!
சிறுமனம் திரிந்து எரிந்து புகையும்.!
பொறுமைக் குணம் பற்றி முற்றாக அணைந்தால்,!
நாம் தூங்க நல்ஞானம் தூங்குவதால்,!
ஆம் என்று சோகம் தானாய் புகுதலே.!
ஆன்ம தவம், தர்மநெறி நீறு பூப்பதால்!
ஆன்மாவின் ஆழ் அமைதி அவிந்து போதலே.!
ஆழ்ந்த பார்த்தால் அதுவும் ஒரு தொடர் கதையே
வேதா. இலங்காதிலகம்