25-9-06. !
மனம் நெகிழ்ந்த போதும், !
மனம் மகிழ்ந்த போதும், !
மனம் குலைந்த போதும், !
மனம் அனாதரவான போதும், !
மனம் கனத்த போதும் !
மணித் துளியாகத் துளிர்க்கும். !
மனம் பின்னர் இலேசாகும். !
மாய மந்திரமானது கண்ணீர். !
-------------------- !
வல்லின மனதையும் கரைக்கும். !
நல்லின மனதையும் சாய்க்கும். !
விழியின் கரையுடைத்து, சமயத்தில் !
வழியும் வெண்படலம் உருகி !
வழியும் உயர் பனித்துளி. !
விழிச்சிப்பி விரிந்து கணத்தில் !
வழியும் முத்துகள் கண்ணீர். !
-------------------- !
கண்களில் பளபளக்கும் அபிசேகக் !
கனகதுளி வெந்நீர் திரையிட்டால் !
மன்னராலும் கரையிட முடியாது. !
தேசியச் சாரல் கண்ணீர். - சமயத்தில் !
தந்திர உபாயக் கருவி. !
தூசி விழுந்தாலும் இது ஓர் !
ஆசி பெற்ற பொது நீர். !
அரிய உயிரை அரிக்கும் நீர். !
------------------- !
உப்புக் கரிக்கும் கண்ணிர். !
உழைப்பாளி, பணக்காரன், ஏழை !
இந்து, கிறிஸ்து, இஸ்லாம் !
கிறுக்கன் மேதையென எண்ணாதது. !
சம்பந்தன் கண்ணீருக்குப் பாலமுதை !
சர்வேசுவரி இரங்கி ஊட்டினாள். !
வானத்துக் கண்ணீர் மழையில் !
வளமாகிறது அற்புதப் பூவுலகு. !
------------------ !
வேப்பமரத்துக் கண்ணீர் !
அப்புதலுக்கு ஒரு பிசின். !
இறப்பர் மரத்துக் கண்ணீரில் !
இராச்சியப் பொருளாதாரம் உயர்வு. !
மனிதக் கண்ணீரின் சாதனையன்றி !
மரத்துக் கண்ணீரும் உயர்வுதான். !
கண்ணீர் வடிக்கும் துன்பத்தால் !
கட்டுடலே தளர்கிறான் மனிதன். !
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்