எனக்கு இப்பொழுது
மூன்று வயதாயிருக்கலாம்!
அப்பா எங்கே என்று
அம்மாவைக் கேட்டால்,
தப்பாமல் இந்தப்
பொம்மையைக்
காண்பிப்பாள்!
அவர் நினைவாய்
எனக்கு
இதுவென்றால்,
என் நினைவை
எதைக் கொண்டு
அவரிடம் உறுதி
செய்வாள்?
கண்ணீர் தோய்ந்த
தன் புடவைத் தலைப்பால்
என் முகந்துடைப்பாள்!
எங்கோ இருப்பதாய்
ஒப்புக்குச் சொல்லி வைப்பாள்!
எப்போ வரும் எனக்
கேட்டால் -
என் உச்சி முகர்ந்து
தலையைத் தடவுவாள்!
சாமிக்குத்தான் தெரியும்
அம்மாவின் சங்கடமும்
சமாளிப்பும்!
எப்படியும் ஒருநாள்
அப்பா வரும்

எழிலி