சத்தி சக்திதாசன் !
யான் பெற்ற நற்றவப் பயன் இங்கு !
யாத்தெடுத்த தமிழ் கோர்க்கும் !
நூற்தொடுக்கும் மனமுடைத்து எனை !
நூறாண்டு நிலையாக்கும் வகை செய்தான் !
கவியெந்தன் கருத்தினில் பொழிய - என்றும் !
கற்றுணர்ந்த தமிழென் கைகொடுத்து உயர்க்கும் !
சிற்றறிவேயெ ந்தன் சிரசில் கொண்டாலும் !
சிந்தனையொ ப்ப வழியும் நினைவலையே !
பலர் ரசிக்க தமிழ்கூறி மகிழ்ந்திருந்து !
பண்பாடி யென்றும் இசையினில் மூழ்கி !
தாய்மொழியின் அழகில் அமிழ்ந்தெந்தன் !
தந்தை நாட்டின் கனவில் மிதந்திருப்பேன் !
சப்தத்தின் ஸ்வரங்கள் மெருகேற்றி !
சங்கீத மழைபொழிந்து கண்ணயர்க்கும் !
சொற்றுணை கொண்டு யானிங்கு உம்முடனே !
செந்தமிழ் புகழ்பாடி சிறந்திருப்பேன்
சத்தி சக்திதாசன்