வெண்ணிலவே கொஞ்சம் நில் !
வேதனையால் வெந்த என் நெஞ்சத்தை உறங்க வைக்கும் !
குளிர்மை எங்கிருந்து பெற்றாய் சொல் !
தென்றலோடு உறவாடும் மல்லிகையே ! !
தூங்க மறுத்து சோகத்தில் தள்ளாடும் என்னிதயத்தை ஓர் நொடியில் !
மகிழ்விக்கும் சுகந்தத்தை யார் கொடுத்தார் !
நீலவானில் பவனி வரும் வெண்மேகங்களே ! !
காலகாலமாய் மாறாத காயத்தின் வடுக்களை கணத்தினிலே ஆற வைக்கும் !
தூய்மையான வெண்மையை எவ்விடத்தே பெற்றீர் !
இரவின் இருளைச் சுட்டுப் பொசுக்கும் சூரியனே ! !
உன் ஒளியைக் கொண்டு என் மன இருளை விலக்கும் !
ஆற்றல் நீ அடைந்தது எப்போ சொல் !
புவியில் பசி போக்கும் அரிசியைத் தாங்கி நிற்கும் நெற்கதிரே ! !
புண்ணான என் எண்ணங்களை ஒரு நொடியேனும் !
பூவாக்கும் அந்த பச்சை வண்ணத்தை எங்கே வாங்கினாய் !
இறைவா அடுக்கடுக்காய் நீ கொடுத்தாய் சோதனைகள் கருணையோடு !
இயற்கைதனை என்னருகில் இருத்தி உரையாடும் மனத்தை நீ எனக்கு !
ஈன்றதனால் மட்டுமே இன்றும் நான் இவ்வுலகில் தவழ்கின்றேன் !
-- சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்