நீதானா என்னை அழைத்தது ? - சத்தி சக்திதாசன்

Photo by Pat Whelen on Unsplash

சக்தி சக்திதாசன்!
!
கண்மூடி சயனித்திருந்த வேளை!
கருத்தொடு கலந்திருந்த பொழுது!
கற்றாக மிதந்திருந்த நேரம்!
கண்ணே ... நீதானா என்னை அழைத்தது ...?!
இயற்கையின் வனப்புகள் தந்த!
இன்பத்தின் திளைப்புக்குள்!
இதயத்தைப் பறிகொடுத்து, என்னையே!
இழந்திருந்த வேளை ... கண்ணே ....!
நீதானா என்னை அழைத்தது .... ?!
சிந்தனை மாளிகையினுள்!
சில்லென்று தென்றல் அடிக்கும் போது!
சந்தடி எதுவுமின்றி இந்த உலகச்!
சச்சரவுகள் வேண்டாமென்றிருந்த போது!
சத்தமின்றி உள்ளே நுழைந்து ... பெண்ணே...!
நீதானா என்னை அழைத்தது .... ?!
சமனில்லா வாழ்க்கையிது என்!
சனமில்லா உலகத்தினுள் நான்!
சமவாழ்வு தனை கண்மூடி கண்டவேளை!
சலங்கையொலி கேட்காமலே... எழில் நிலவே ...!
நீதானா என்னை அழைத்தது ..... ?!
கற்றவர்கள் சொல்லுகின்ற!
கருணையற்ற வாழ்க்கைதன்னை!
கழித்துவிட்டெந்தன் அழகிய!
கனவுலக சம்ராஜ்ஜியத்தில்!
கலந்திருந்த அன்பெனும் ஆழிதனில்!
களவாக நீந்தி வந்து மங்கை நீயா ...!
நீதானா என்னை அழைத்தது ...!
உள்ளத்தைக் கிள்ளி என்னைக் காதல்!
வெள்ளத்தில் தள்ளி, ஆசையெனும் வானத்தில்!
வேகமாய் பறக்க விட்டு ஜயகோ.....!
வேஷம் போட்டு பின் ஏன்தான்!
வேண்டாத நிஜ உலகத்தின்!
வேதனையைப் பரிசளித்தாய்....!
நீயா .... நீதானா.... அது நீயேதானா
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.