கவிதைகளால் புணரப்படும் சுவை அறியாத!
உன்னுடனான என் தோழமை!
என் கவிதை வரிகளை எரித்ததினாலேயே!
உருவானது...!
நமக்குள்ளான நிகழ்வுகள் பற்றிய என் குறிப்புகள்!
எல்லாம் நம் தோட்டத்தில் புதைக்கபட்டன!
எனினும் ரகசியமாக நான் எழுதிய குறிப்புகளின்!
வார்த்தைகள் எல்லாம் உன்னாலேயே சிருஷ்டிக்கபட்டன...!
நம் நிகழ்வுகளின் குறிப்புகளில் எல்லாம்!
கவிதைக்கான வார்த்தைகள் கவனமாக தவிர்க்கபட்டிருந்தன...!
வெளிச்சம் குறைவான மாலை நேர சந்திப்புகளின் இறுதியில்!
நெடிய முத்தங்களுடன் பிரிவோம்..!
நான் தனித்து நடக்கும் இரவுகளின் கவிதைக்கான வார்த்தைகள்!
என்னுடன் இருந்திருந்தன...!
ஒரு கோடையின் இறுதியில் வேட்கைகளின் நிஜத்தில் நாம்!
திளைத்திருந்த மாலையில் நம் தோட்டத்தின் எல்லா குறிப்புகளும்!
கவிதைகளாக மலர்ந்திருந்தன...!
பிறகு நெடுநாட்கள் நாம் சந்திக்கவில்லை...!
தனிமையில் சேர்ந்திருந்த வார்த்தைகளின் கனம் கூடி மழை பொழிவின் உச்சத்தில்!
நம் குறிப்புகளின் இருந்து கவிதைகள் தம்மை தாமே உருவாக்கி கொண்டன!
முடிவுறாத ஒரு கவிதையின் முதல் வரியை போல!
ஒவ்வொரு கோடையின் இறுதியிலும் மழை பொழிகிறது
முத்துக்குமார்