அவன் , அவள் , இறைவன் - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

சக்தி சக்திதாசன்!
அவள்:!
கண்ணும் கண்ணும் உத்தரவின்றிக்!
கலந்ததாலே கனிந்த காதல் மலர்!
காளையவன் கசக்கியதால் கருகியின்று!
கண்ணீரில் கரைந்து மறைந்ததம்மா!
அவன் :!
நானொரு சுதந்திரப்பறவையடி!
போகின்ற வழியில் கொஞ்சம்!
பொழுதோடு இளைப்பாற - உன்!
மனத்தோட்டம் அமர்ந்தேண்டி!
அவள் :!
கன்னியரின் வாழ்க்கையோடு!
காளையர்கள் ஆடும் சடுகுடு விளையாட்டு!
காகிதத்தில் எழுதுகையில் காதலது!
காவியமாய் மலர்வதுண்டு!
அவன் :!
பருவத்தின் தேரோட்டம்!
பாவையுந்தன் உடலாகும்!
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும்!
காதலது நெருப்பாகும் !
அவள் : !
தாய் சொல்லைக் கேட்கவில்லை!
தந்தை தன்னை மதிக்கவில்லை!
தானாக போய்விழுந்தேன் மீனாக!
தவிக்கின்றேன் வலையிலின்று!
அவன்:!
மனவாழ்க்கை வேறு!
மணவாழக்கை வேறு!
பணமுடைய மங்கையர்க்கு!
இரண்டுமே வாய்ப்பதுண்டு!
அவள்:!
விதியென்று சொல்ல மாட்டேன்!
வினையென்று கருதமாட்டேன்!
வாழ்க்கையிலே வஞ்சியர்க்கு!
வந்த நல்ல பாடமென்பேன்!
அவன் :!
காதலிப்பது எந்தன் உரிமை!
நானோ என் பெற்றோர் உடமை!
வாலிபத்தின் வனப்பில் உன்னுடன்!
விளையாட்டுக் காதலடி!
அவள் :!
போதுமிந்தப் பொல்லாத வாழ்க்கை!
போலி மனிதர் முகத்திரையின் வேஷம்!
பாவையெந்தன் வாழ்கையினி நல்ல!
பாடமாக மங்கையர்க்கு இருக்கட்டும்!
இறைவன் : ( சிரிக்கின்றான்)!
அவள் போட்ட கணக்கொன்று!
அவன் போட்ட கணக்கொன்று!
பெற்றோரின் கணக்கொன்று!
கூட்டிக் கழித்தால் அனைத்தும்!
கூத்தாடிகளின் கூடாரம்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.