ஓசையில்லா முத்தம்.. தூங்காத கண்களுக்கு!
01.!
ஓசையில்லா முத்தம்!
---------------------------- !
வானத்தின் முத்தம்!
பூமியின் மேல்!
நிழலாய் ஓசையில்லாமல்...!
இரவின் முத்தம்!
பகலின் மேல்!
மெளனமாய் படர்ந்தது போல் ...!
பனியின் முத்தம்!
புற்களின் நுனியில்!
சத்தமிலாமல் துளிர்த்தது போல் ...!
என் காதலின் முத்தம்!
ஓசையில்லாமல் பார்வையினூடாக!
உன்னிதயத்தில் விழுந்தது புரிந்ததா? !
!
02.!
தூங்காத கண்களுக்கு!
------------------------ !
காத்திருந்து காத்திருந்து!
கனவுலகில் பூத்திருந்து!
நேத்திருந்த ஞாபகங்கள் !
நெஞ்சினிலே ஏக்கமிட!
மூட மறந்தனையோ !
விழிகளே இமைகளை!
ரோஜாமலரின் சிவப்பையும்!
மல்லிகையின் வெண்மையையும்!
மங்கையவள் வனப்புக்கு!
மயங்கி மனமும் ஒப்பாக்கியதால்!
கண்டுவிட்ட அழகதனை இழந்துவிட!
முடியாத காரணமோ இன்று!
மூடாத விழிகளுக்கு!
வில்லெடுத்து அம்பு தொடுத்து!
இதயம் தனை குறிபார்த்தே!
எய்துவிட்ட பார்வையதால்!
காதலென்னும் காயம் தந்த!
கட்டறுத்த வலிகொண்டு!
காளையவன் தவித்த காரணத்தால்!
கண்கள் மூட மறுத்தனவோ!
தூங்காத கண்களுக்கு !
தாங்காத நெஞ்சம் ஒன்று!
நீங்காத நினைவுகளால்!
பாங்கான கேள்விக்கணைகள்!
தொடுத்து பார்க்கும் வேளையிது!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்