சக்தி சக்திதாசன்!
தினமும்!
நான் போடும்!
எனக்குள் யுத்தம்!
உண்மையொன்றை!
என்னுள்ளம்!
உரைத்துவிட்ட வேளையது!
தெறிக்கின்ற விளைவுகளால்!
மனதுக்குள் ஒரு யுத்தம்!
கவிதையொன்றை!
நினைத்து விட்டால்!
காகிதத்தில் கிறுக்கிவிட!
கடிகார முள்ளுடனே!
கடுமையான ஒரு யுத்தம்!
காலையிலே விழித்துவிட!
கனவுகளைக்!
கலைத்து பாவம் நானும்!
கண்ணிமைகளோடு!
ஒரு யுத்தம்!
வரிசையாக ஊர்ந்து செல்லும்!
வீதிவல மோட்டார் வண்டிகளினூடு!
தாமதித்து புறப்பட்டும்!
சரியான நேரத்திற்கு!
காரியாலய கதிரையிலே!
கச்சிதமாய் அமர்ந்துவிட!
நப்பாசை கொண்டு போடுமொரு!
மோட்டார் வண்டி யுத்தம்!
காலை எழுந்தது முதல்!
இரவினில் னங்கும் வரை!
வாயிலிருந்து உதிர்த்த!
சொற்களில்!
எத்தனை பிழையான இடத்தில்!
சரியாக விழுந்தன எனும்!
ஆராய்ச்சி யுத்தம்!
அதனாலே தூக்க கலக்கத்துடன்!
துயில் யுத்தம்!
எத்தனை யுத்தங்களப்பா !!
எத்தனை உணர்ச்சிகள்!
என்ன இவன் இன்னும்!
மனிதன் என!
மறக்காமல் தனக்குள்ளே!
விதைக்கின்றான் சாட்சிகளை
சத்தி சக்திதாசன்