சக்தி சக்திதாசன்!
எண்ணக் கருவறையில்!
என்னிதயத்து உணர்வுகள்!
கருக்கொண்டு கவிதையாக!
கணப்பொழுதினில் பிரவசமோ !!
சொல்லத் தெரியாத உணர்வுகள்!
சொல்ல முடியாத வார்த்தைகள்!
சொற்சிலம்பமாடித் தமைக் காட்டும்!
கண்ணாடியாய்ச் சில கவிதைகள்!
எந்தையும் தாயும் வடித்த!
அன்பெனும் கவிதையில் முகிழ்த்த!
ஆசைக் கவிதையின் உருவமாய்!
அவனியில் இன்று கவிதையாய் ....!
முந்தைய பருவத்து நினைவுகள்!
முல்லையாய் மணந்திட்ட பொழுதுகள்!
முத்தமிழ்க் கடலினுள் மூழ்கியே!
முத்தெடுத்துக் கோர்த்த கவிதைமாலைகள்!
சிந்தையை உலுப்பிய கணங்களும்!
செந்தமிழ் தடவிய களிப்பிலும்!
பந்தயம் போட்டுக் கெடுவது போல்!
பாழாகிப் போன காலங்களும்!
விந்தைதான் உலகில் அன்பெனும்!
விலையில்லா அருமருந்து தரும்!
வித்தக வடிவின் வெளியிடை!
வியத்தகு கவிதையின் வனப்புகள்
சத்தி சக்திதாசன்