சக்தி சக்திதாசன்!
இத்தரை மீதினிலே எனை அன்னை!
இட்டதினாலே நான் பட்டது போதும்!
இதுவரை யென்றொரு சத்தமென்!
இத்யத்தில் பலமாய் எழுந்ததுவே!
முற்தரைதான் இவ்வாழ்க்கைப் பாதை!
முட்களை வைத்து பச்சைக்கம்பளம்!
மூடியவர் செய்தது ஓர் சதியென்றறிந்ததும்!
முழுதாய்ப் புலர்ந்தது உலகின் கோலம்!
கற்றவைய னைத்தும் ஓர் புத்தகமாய்!
கட்டியென் நெஞ்சத்தில் வைத்தவைக்கு!
கொடுத்தொரு பெயர் அனுபவம் என்றே!
கண்டது அவைதாம் மிச்சம் புவியினில்!
சித்திரைத் திங்கள் தோறும் ஒரு!
சித்திரத் தமிழ்ப்பாவை புதுவருடமென!
செழிப்புடன் குதிர்ந்து முன்வந்துமேனோ!
சீரான ஓர் மனநிலை ஏனில்லை ?!
முத்திரை போலே ஏழ்மை இவ்வுலகில்!
முழுதாய் தலைவிரித்தாடுகையில்!
முகத்தில் களிப்பில்லா மாந்தர்தனைக் கண்டு!
முத்தமிழ் துணையால் மனமிங்கு இயம்புது!
பத்தரை மாற்றுத் தங்கமென மிளிரும்!
பழுதற்ற தலைவர்கள் இல்லையெனும்!
பழுத்த அனுபவக் கூற்றிங்கு உண்மையென!
படித்து முடிக்கையில் வாழ்வும் முடியுதே!
முழுத்திரை போட்டு உண்மைகளை மறைக்கும்!
முகத்திதிரை போட்ட மனிதர்கள் மத்தியில்!
முட்டாள் எனப் பெயர் எடுத்ததும் இவ்வையகத்தில்!
மனத்தினை சிதைக்கும் வேதனைகள்!
புற்றினில் மறைந்துள்ள பாம்பினைப்போல!
புறத்தினில் குத்தும் உறவுகள் எத்தனை!
பெற்றவை அனைத்தும் விலையிலா அனுபவங்கள்!
பெற்றவள் அறிந்தால் துடித்திடுவாள்
சத்தி சக்திதாசன்