காதலென்னும் உணர்வினிலே!
கலந்திட்ட போது!
கட்டுண்ட நினைவுகள்!
சிக்குண்டு தவித்தன!
சிந்தனையின் துளிகளெல்லாம்!
தேனாகிச் சுவைத்தன!
பிரிந்து சென்ற பொழுதெல்லாம்!
வேம்பாகிக் கசந்தன!
நின்னோடு இணைந்து நின்ற!
நிமிடங்கள் துளிகளாக!
கண்ணே நீ மறைந்த கணங்கள்!
மணிகளாகிக் கனத்தன!
கண்களின் வழியூடு மெதுவாய்!
இதயத்தில் புகுந்தவள்!
உன்னெஞ்ச மெத்தையில்!
துயில்பவனென அறிந்ததும்!
விண்ணோடும் முகில்களில்!
தானோடி மகிழ்ந்தவன்!
காதலென்னும் உணர்வுகளின்!
நவரசத் தன்மைகள்!
காலமெல்லாம் ருசித்திட!
காணவேண்டும் உண்மைக்காதல்!
கரும்பாகிக் இனித்திடும்!
கனலாகித் தகித்திடும்!
பலபொழுது கசந்திடும்!
சிலநேரம் வியந்திடும்!
தனதென்றால் சிலிர்த்திடும்!
தனியாகச் சிரித்திடும்!
ஆமாம்!
காதலென்னும் உணர்வினில்!
கட்டுண்ட வேளையில்
சத்தி சக்திதாசன்