சக்தி சக்திதாசன்!
!
காலத்தின் வெள்ளத்தில் அடிபட்டு!
காத்திருக்க நேரமின்றி!
ஓடிக் கொண்டிருக்கும் என்!
இளைய தலைமுறையே ......!
அவசரத்தில் தவறுதலாய்!
அடிமனதில் தளிர் விடும்!
மனிதாபிமானத்தை மட்டும்!
மறந்து விட்டு போகாதே.....!
நேற்றைகளின் கனவுகளில்!
இன்றைய நிகழ்வுகளாய்!
நாளைய பாடங்கள் தான்!
நம்முன்னே நிற்கின்றன......!
அனுபவங்கள் ஆயிரம்!
அடைந்த அற்புத மனிதர்!
இலவசமாய்த் தருவதால்!
இகழாதே புத்திமதிகளை....!
கண்முன்னே மின்னிடும்!
அத்தனையும் பொன்னல்ல !
கூழாங் கற்களும் வெளிச்சத்தில்!
மின்னிடும் பாசாங்கு உலகமிது...!
காற்றுள்ள போதே து£ற்றிக்கொள்!
காதோடு இதனை வாங்கிக்கொள்!
நிஜத்தின் பிம்பம்தான் நிழல்!
நிழலுக்காக நிஜத்தைக் கொல்லாதே!
காளையரின் உரிமை காதல்!
காதலின் உடமை கண்ணியம்!
கன்னியரின் மனதைப் பூப்போலே!
காப்பது காளையரின் கடமையே!
சம உரிமைச் சமுதாயம் தானிது!
ஆணோடு பெண்ணும் ஒரு தளம்!
வாலிபரின் வரம்புகளைக் காப்பது!
வனிதையரின் கடமையும் மறக்காதீர்!
சித்திரம் போன்ற பல பாவையர் வாழ்வு!
சிதைந்தது பூமியில் கண்முன்னே!
சீதனம் என்னும் அரக்கனை!
சிரச்சேதம் செய்திடுவீர் இகத்தினில்!
உழைப்பவர் வாழ்வினில் பெருந்துயர்!
உதிருமே அவர் கண்ணில் நீர்த்துளி!
உரிமைகள் அவர்க்குக் கிடைத்திட!
உழைத்திடும் என் இனிய தலைமுறை!
பிறந்தவர் அனைவரும் இறப்பது!
பிழைக்காத உண்மை இவ்வுலகிலே!
உரைக்காத உண்மைகள் என்னுள்ளத்தில்!
உறங்குவதால் யாருக்கு லாபமுண்டு!
அன்பாக வேண்டுகின்றேன் உறவுகளே!
அகிலத்தில் பெருமை சேர்க்க வாழ்ந்திடுவீர்!
அன்னை தந்தை உளம் உவக்க சிறந்திடுவீர்!
அற்புதமான என் இனிய இளைய தலைமுறையே
சத்தி சக்திதாசன்